AUTHOR NAME

Sri Giridhari Das

119 POSTS
0 COMMENTS
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

பகவான் பலராமர் துரியோதனனின் பக்கமா?

பலராமரின் நடத்தையில் மேலோட்டமாகத் தெரியக்கூடிய முரண்பாட்டினை ஆராய்வதற்கு முன்பாக, பலராமர் யார் என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளுதல் அவசியம். பலராமர் ஒரு சாதாரண ஜீவன் அல்லர், விசேஷமான ஜீவனும் அல்லர், ஸ்வர்க லோகத்தில் வாழும் தேவனும் அல்லர்; அவர் எண்ணிலடங்காத பிரபஞ்சங்கள் அனைத்திற்கும் ஆதியான முழுமுதற் கடவுளாவார். கிருஷ்ணரின் முதல் விரிவாகிய பலராமர் கிருஷ்ணரிலிருந்து வேறுபடாதவர். அவர் கிருஷ்ணரைப் போலவே ஸச்சிதானந்த திருமேனியுடன் ஆன்மீக உலகில் நித்திய வாசம் புரிபவர். கிருஷ்ணரிடம் உள்ள அனைத்து சக்திகளும் பலராமருக்கும் உண்டு. பலராமருக்கும் கிருஷ்ணருக்கும் இரண்டு வேற்றுமை மட்டுமே உள்ளன.

பாகுபலியும் மஹாபாரதமும்

பாகுபலிக்கும் பகவத் தரிசனத்திற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் நினைக்கலாம். பாகுபலியையும் மஹாபாரதத்தையும் ஒப்பிடப் போகிறார்களோ என்றும் நினைக்கலாம். இல்லை. பாகுபலியின் காய்ச்சல் மக்களிடம் சற்று தணிந்துள்ள இவ்வேளையில், அதைக் காட்டி சில போதனைகளை உரைத்தால், யாம் கூறுவதை மக்கள் காது கொடுத்து கேட்பர் எனும் நம்பிக்கையில் பாகுபலி பகவத் தரிசனத்திலும் நுழைந்துள்ளது.

காரேய் கருணை இராமானுஜா!

ஆச்சாரியர் என்பவர் ஜடவுலக வாழ்வின் அன்றாடத் துயரங்களைப் போக்குபவர் அல்லர், அவர் ஜடவுலக வாழ்க்கை என்னும் ஒட்டு மொத்த துயரத்தையும் போக்குபவர். நவீன காலத்தில் ஆன்மீகப் பணிகள் என்ற பெயரில், பலரும் பௌதிக சமூக சேவைகளைச் செய்து வருகின்றனர். மருத்துவமனை திறத்தல், பள்ளிகளைத் திறத்தல், அன்னதானம் வழங்குதல் முதலிய பல்வேறு சமூக சேவையில் ஈடுபடுவோரை மக்கள் ஆன்மீகவாதிகள் என்று அங்கீகரித்து அவர்களைப் போற்றிப் புகழ்கின்றனர். ஆனால் உண்மையில் அத்தகு பௌதிகமான சமூக சேவைகள் எதுவும் ஆச்சாரியர்களின் பணியல்ல. ஆச்சாரியர்கள் மக்களுக்கு உண்மையான சேவையை வழங்க வல்லவர்கள். அதாவது, மக்களை முற்றிலுமாக பௌதிகப் பெருங்கடலிலிருந்து காப்பாற்றக்கூடியவர்கள். உடல் சார்ந்த சேவைகள் அனைத்தும் தற்காலிகமானவை, ஆத்மாவைக் காப்பாற்றும் பணியே உண்மையான சேவை, அதைச் செய்வோரே உண்மையான ஆச்சாரியர்கள்.

ஜல்லிக்கட்டு : சில எண்ணத் துளிகள்

தமிழர்களின் பண்பாடு மட்டுமா: ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பண்பாடு என்று பரப்பப்படுகிறது. இன்றைய சூழ்நிலையில் அஃது உண்மையைப் போல தோன்றினாலும், உண்மையில் இப்பயிற்சி பாரதம் முழுவதும் இருந்து வந்துள்ளது என்பதை கவனிக்க வேண்டும். கடந்த பகவத் தரிசன இதழில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எவ்வாறு ஒரே சமயத்தில் ஏழு காளைகளை அடக்கி ஸத்யா (அல்லது நப்பின்னை) என்ற இளவரசியைத் திருமணம் செய்தார் என்பதை விவரித்திருந்தோம். ஸத்யா கிருஷ்ணரின் உறவுக்கார பெண்மணி என்பதால், நிச்சயம் அவளது நாடு தமிழகமாக இருந்திருக்க வாய்ப்பில்லை. காளைகளை அடக்கி மணமுடித்தல் என்ற பழக்கம் பாரதம் முழுவதும் இருந்து வந்துள்ளது. சமீப காலத்தில் அது படிப்படியாகக் குறைந்து பாண்டிய நாட்டுடன் தொடர்புடைய பழக்கமாக மாறி விட்டது என்பதை கவனிக்க வேண்டும்.

கீதையுடன் திருக்குறளை ஒப்பிடலாமா?

திருக்குறள் முழுவதும் வர்ணாஷ்ரம நெறிகள், குறிப்பிட்ட வர்ணத்தாருக்கான கடமைகள், கர்ம விதிகள், மறுபிறவி, மறுவுலகம், ஸ்வர்கம், நரகம், மோக்ஷம், பஞ்ச-மகா யாகங்கள், பித்ரு கர்மங்கள் முதலிய பல்வேறு விஷயங்கள் காணக்கிடக்கின்றன. இவை நிச்சயம் வேத புராணங்களின் தாக்கமே. ஸ்வர்க வாழ்வைக் காட்டிலும் வீடுபேறு உயர்ந்தது, அது மாற்றமில்லா வாழ்க்கை, ஆசையை ஒழித்தவரால் அதனை அடைய முடியும் போன்ற கூற்றுகளும் குறள்களில் ஒலிக்கின்றன.

Latest