AUTHOR NAME

A.C Bhaktivedanta Swami Prabhupada

226 POSTS
0 COMMENTS
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

கடவுளின் பிரதிநிதியும் கடவுளும்

ஆம், தற்போதைய சூழ்நிலையில், கிருஷ்ணரைக் காண்பதற்கான பயிற்சியை நீங்கள் இன்னும் பெறாத காரணத்தினால், அவர் கருணை கூர்ந்து நீங்கள் காண்பதற்கு உகந்த வடிவில் தோன்றுகிறார். உங்களால் மரத்தையும் கல்லையும் காண முடியும், ஆனால் ஆன்மீக விஷயங்களை உங்களால் காண முடிவதில்லை. உங்கள் தந்தை மருத்துவமனையில் இருக்கும்போது இறந்துவிடுவதாக எடுத்துக்கொள்வோம். அவரது படுக்கையின் அருகில் அமர்ந்து, என் தந்தை போய்விட்டாரே என்று நீங்கள் அழுகிறீர்கள். அவர் போய் விட்டார் என்று நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள்? போய்விட்ட பொருள் என்ன?

தெய்வீக அன்பினால் பெறப்படும் விடுதலை

மனம் பலன்நோக்குச் செயல்களால் மாசுபடும்போது, உயிர்வாழி ஒரு பௌதிக நிலையிலிருந்து மற்றொன்றிற்கு உயர விருப்பப்படுகிறான். பொதுவாக ஒவ்வொருவரும் தத்தமது பொருளாதார நிலையை முன்னேற்றுவதற்காக அல்லும்பகலும் அரும்பாடுபட்டு உழைக்கிறார்கள். ஒருவன் வேதச் சடங்குகளைப் புரிந்து கொண்டால்கூட, ஸ்வர்க லோகத்திற்குச் செல்லவே ஆசைப்படுகிறான்

கிருஷ்ணரை திருப்தி செய்வதற்கான வழி

கிருஷ்ணரை திருப்தி செய்ய விரும்புவோர் அவரை அவரது பிரதிநிதியின் மூலமாக அணுக வேண்டும் என்பதை ஸ்ரீல பிரபுபாதர் தனது இந்த உரையாடலில் தெரியப்படுத்துகிறார்.

உணர்வு பரிணாமம், உடல் பரிணாமம்

உணர்வு பரிணாமம், உடல் பரிணாமம் ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல்   டாக்டர் சிங்க்: ஸ்ரீல பிரபுபாதரே, 84 இலட்சம் உயிரின வகைகளும் ஒரே சமயத்தில் சிருஷ்டிக்கப்பட்டன என்று நான் பகவத் கீதையில் படித்தேன். அது சரியா? ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். டாக்டர் சிங்க்:...

கிருஷ்ணரை அறிவோம்

“நான் அனைத்திலும் பரவியிருக்கிறேன், அஃது எனது அருவமான விசேஷத் தன்மை,” என்று கிருஷ்ணர் பகவத் கீதையில் (13.14) கூறுகிறார். கிருஷ்ணர் தனது அருவ தன்மையினால் எல்லாவற்றிலும் இருக்கிறார், ஆனால் அவர் ஒரு நபர். கிருஷ்ணர் அனைத்துமாக மாறிவிட்டால், அவர் நபராக இருப்பது எவ்வாறு சாத்தியம் என்று மாயாவாதிகள் நினைக்கிறார்கள். இது முழு அயோக்கியத்தனம். ஏனென்றால், இது ஜடக் கருத்தாகும், ஆன்மீக அறிவு அல்ல. பௌதிகத்தில் நாம் ஒரு துண்டு பேப்பரை சுக்குநூறாகக் கிழித்தெறிந்தால், உண்மையான பேப்பர் அங்கு இருப்பதில்லை. இதுவே பௌதிகம். ஆனால் எவ்வளவு பகுதிகள் பூரண உண்மையான கிருஷ்ணரிடமிருந்து பிரிந்தாலும், முழுமையானது முழுமையாகவே உள்ளது. இதனை நாம் வேதங் களிலிருந்து அறிகிறோம். பௌதிகமாக ஆராய்ந்தால் ஒன்றிலிருந்து ஒன்றைக் கழித்துவிட்டால் பூஜ்யம். ஆனால் ஆன்மீகமாகப் பார்த்தால், ஒன்றிலிருந்து ஒன்றைக் கழித்தாலும் அந்த ஒன்று ஒன்றாகவே இருக்கிறது, கூட்டினாலும் ஒன்றாகவே இருக்கும்.

Latest