AUTHOR NAME

A.C Bhaktivedanta Swami Prabhupada

226 POSTS
0 COMMENTS
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

யோகத்தின் நோக்கம்

பகவத் கீதையில் விளக்கப்பட்டுள்ள யோக முறையானது, மேலை நாடுகளில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொய்யான யோகத் திலிருந்து வித்தியாசமானதாகும். மேலை நாடுகளில் பெயரளவு யோகிகளால் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் யோக முறையானது அங்கீகரிக்கப்பட்டதல்ல. உண்மையான யோகம் கடினமானதாகும். முதலில் புலன்களை அடக்க வேண்டும், அதுவே யோகியின் நிலை. தன் இச்சைப்படி காம வாழ்க்கை வாழ அவன் அனுமதிக்கப்படுவதில்லை. உங்கள் விருப்பம் போல உடலுறவு கொண்டு, போதை பொருட்களை சாப்பிட்டுக் கொண்டு, மாமிசம் உண்டு கொண்டு, சூதாடிக் கொண்டும் இருந்தால் நீங்கள் ஒரு யோகியாக மாற முடியாது. குடிப் பழக்கம் உங்களுக்கு இருந்தாலும் நீங்கள் யோகியாகலாம் என்று விளம்பரப்படுத்திய ஒரு இந்திய யோகி இங்கு வந்தபோது திகைப்படைந்தேன். இது யோகமுறை அல்ல, யோகம் என்று நீங்கள் இதனை அழைக்கலாம். ஆனால் இது தரமான யோகம் அல்ல.

மனிதன் கீழ்நிலை உடலை அடைதல்

மனிதன் கீழ்நிலை உடலை அடைதல் ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல்   ஸ்ரீல பிரபுபாதர்: விஞ்ஞானிகள் என்று கூறிக் கொள்பவர்கள் ஒரு பொய்யான கோட்பாட்டை நம்பியிருக்கிறார்கள், அனைத்தும் ஜடத்திலிருந்து வருவதாக நினைக்கின்றனர். அஹம் ஸர்வஸ்ய ப்ரபவ:, "நானே எல்லாவற்றிற்கும் மூலம்" என்று...

வாழ்க்கையின் குறிக்கோள் என்ன?

வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல்   பிரபுபாதர்: சமுதாயத்தைத் தலைமை தாங்கிச் செல்லும் தலைவர்கள் வாழ்க்கையின் குறிக்கோளைப் புரிந்து கொண்டு, அவற்றை மனித சமுதாயத்தின் நன்மைக்காக அறிமுகப்படுத்த வேண்டும். சமுதாயத்தின் தற்போதைய குழப்பமான...

அமைதிக்கான உண்மையான வழி

ஒவ்வோர் உயிரினமும் அமைதியை நாடுகிறது. எறும்பு முதல் பிரபஞ்சத்தில் முதன்முதலில் படைக்கப்பட்ட பிரம்மா வரை அனைவரும் அமைதியைத் தேடுகிறார்கள். அதுவே முக்கியமான நோக்கம். பூரண கிருஷ்ண உணர்வில் இருப்பவன் மட்டுமே அமைதியானவனாக இருக்க முடியும் என்று சைதன்ய மஹாபிரபு கூறியுள்ளார்; ஏனெனில், அவனுக்கென்று எந்த தேவைகளும் இல்லை. இதுவே கிருஷ்ண உணர்வில் இருப்பவனின் விசேஷ தகுதியாகும். அவன் அகாம எனப்படுகிறான். அகாம என்னும் வார்த்தை தன்னில் திருப்தியடைந்த, ஆசைகள் அற்ற, முழு அமைதி பெற்ற ஒருவனைக் குறிப்பதாகும். யார் அப்படி இருக்கிறார்கள்? கிருஷ்ண உணர்வில் நிலைபெற்ற பக்தர்களே அவர்கள் ஆவார்கள்.

சமுதாய குற்றங்களைத் தடுப்பது எப்படி?

சமுதாய குற்றங்களைத் தடுப்பது எப்படி? குற்றங்களைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் ஆண்டுதோறும் உலகில் பெருமளவிலான பணம் செலவு செய்யப்படுகிறது. எனினும், இம்முயற்சிகளையும் மீறி குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சிகாகோ போலீஸ் துறையின் தகவல் தொடர்பு...

Latest