AUTHOR NAME

A.C Bhaktivedanta Swami Prabhupada

226 POSTS
0 COMMENTS
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

சமுதாயத்தை சீர்படுத்துவதற்கான கல்லூரிகள்

https://tamilbtg.com/wp-content/uploads/2016/11/1-11.jpg சமுதாயத்தை சீர்படுத்துவதற்கான கல்லூரிகள் பின்வரும் உரையாடலில், நவீன சமுதாயத்தின் பிரச்சனைகளுக்கு இயற்கையைச் சார்ந்த சமுதாயத்தை அமைப்பதே தீர்வு என்பதை ஸ்ரீல பிரபுபாதர் தனது சீடர்களிடையே விளக்குகிறார். ஸ்ரீல பிரபுபாதர்: இக்காலத்திலுள்ள அரசியல்வாதிகள் ஏழை மக்களை தங்களது சுயநலனிற்காக...

பகல் கனவு, இரவு கனவு

பகல் கனவு, இரவு கனவு பின்வரும் உரையாடலில், கிருஷ்ண பக்தியில் ஈடுபடாவிடில் நமது செயல்கள் அனைத்தும் பகல் நேரத்தில் காணப்படும் கனவே என்பதை ஸ்ரீல பிரபுபாதர் ஒரு பல்கலைக்கழக மாணவருக்கு எடுத்துரைக்கின்றார். மாணவன்: உங்களது புத்தகங்களில்...

கோலோக விருந்தாவனத்தை விரும்பும் பக்தன்

ஒருவர் கிருஷ்ணரை எந்த விதத்திலும் நினைவுக் கூறலாம். கோபியர்கள் கிருஷ்ணரின் மீதான காதலின் காரணத்தால் அவரைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தனர்; சிசுபாலன் கோபத்தின் காரணத்தால் கிருஷ்ணரையே எண்ணிக் கொண்டிருந்தான்; கம்சன் பயத்தின் காரணத்தால் கிருஷ்ணரை இடைவிடாது எண்ணிக் கொண்டிருந்தான். கம்சனும் சிசுபாலனும் அரக்கர்களாக இருந்தனர்; ஆனால் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் பரம புருஷ பகவானை நினைத்திருந்ததோடு அல்லாமல், இறக்கும் தருவாயிலும் பகவானை நினைவு கூர்ந்தபடியால் கிருஷ்ணராலேயே அவர்களுக்கு முக்தி வழங்கப்பட்டது.

செய்யும் தொழிலை உன்னதமானதாக மாற்றுதல் எவ்வாறு?

செய்யும் தொழிலை உன்னதமானதாக மாற்றுதல் எவ்வாறு? சாதாரண மக்களால் செய்யப்படும் செயலுக்கும் பக்தனால் செய்யப்படும் செயலுக்கும் இடையிலான வேறுபாட்டை விளக்கும் ஸ்ரீல பிரபுபாதரின் ஓர் உரையாடல்.   சீடன்: நாம் பற்றற்று இருக்க வேண்டும் என பகவத்...

பக்குவமான எஜமானரை மகிழ்வித்தல்

நமது உண்மையான மூல கிருஷ்ண உணர்வானது பௌதிக இன்பத்திற்கான உணர்வினால் களங்கமடையும்போது, அதாவது ஜடத்தை அடக்கியாள வேண்டும் என்ற எண்ணத்தினால் களங்கமடையும்போது, நமது துன்பங்கள் ஆரம்பமாகின்றன. உடனடியாக நாம் அறியாமையெனும் மாயையினுள் வீழ்ந்து விடுகிறோம். பௌதிக உலகிலுள்ள ஒவ்வொருவரும், “நான் இந்த உலகில் என்னால் முடிந்தவரை அனுபவிப்பேன்,” என்று எண்ணுகின்றனர். அற்பமான எறும்பிலிருந்து மிகவுயர்ந்த உயிர்வாழியான பிரம்மதேவர் வரை அனைவருமே எஜமானராக வேண்டும் என்று முயற்சிக்கின்றனர். உங்களது நாட்டிலும் எண்ணற்ற அரசியல்வாதிகள் தலைவர்களாக வேண்டும் என்று முயன்று கொண்டுள்ளனர். இதற்கான காரணம் என்ன? அனைவருமே எஜமானராக விரும்புகின்றனர்; இதுவே அறியாமை எனப்படுகிறது.

Latest