AUTHOR NAME

A.C Bhaktivedanta Swami Prabhupada

227 POSTS
0 COMMENTS
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

பக்குவமான எஜமானரை மகிழ்வித்தல்

நமது உண்மையான மூல கிருஷ்ண உணர்வானது பௌதிக இன்பத்திற்கான உணர்வினால் களங்கமடையும்போது, அதாவது ஜடத்தை அடக்கியாள வேண்டும் என்ற எண்ணத்தினால் களங்கமடையும்போது, நமது துன்பங்கள் ஆரம்பமாகின்றன. உடனடியாக நாம் அறியாமையெனும் மாயையினுள் வீழ்ந்து விடுகிறோம். பௌதிக உலகிலுள்ள ஒவ்வொருவரும், “நான் இந்த உலகில் என்னால் முடிந்தவரை அனுபவிப்பேன்,” என்று எண்ணுகின்றனர். அற்பமான எறும்பிலிருந்து மிகவுயர்ந்த உயிர்வாழியான பிரம்மதேவர் வரை அனைவருமே எஜமானராக வேண்டும் என்று முயற்சிக்கின்றனர். உங்களது நாட்டிலும் எண்ணற்ற அரசியல்வாதிகள் தலைவர்களாக வேண்டும் என்று முயன்று கொண்டுள்ளனர். இதற்கான காரணம் என்ன? அனைவருமே எஜமானராக விரும்புகின்றனர்; இதுவே அறியாமை எனப்படுகிறது.

நாம் மிருகம் போல் வாழக் கூடாது

https://tamilbtg.com/wp-content/uploads/2016/11/1-5.jpg நாம் மிருகம் போல் வாழக் கூடாது மனிதப் பிறவி என்னும் அரிய வாய்ப்பைப் பெற்றவர்கள் மாமிச உணவுகளை உண்டு மிருகங்களைப் போல வாழக் கூடாது என்பதை எடுத்துரைக்கும் ஸ்ரீல பிரபுபாதரின் உரையாடல். விருந்தினர்: மிருகங்களை மனிதர்கள்...

நீங்கள் முழுமுதற் கடவுள் அல்ல

நீங்கள் முழுமுதற் கடவுள் அல்ல அனைவருமே கடவுள் என்று கூறும் மாயாவாதிகளின் கூற்றுகளை முறியடிக்கும் ஸ்ரீல பிரபுபாதரின் உரையாடல்.   ஸ்ரீல பிரபுபாதர்: ஜீவன்களும் சரி, கிருஷ்ணரும் சரி, இருவருமே உணர்வுடையவர்கள். ஜீவன்களின் உணர்வு அவனுக்குள் மட்டுமே...

பக்தி யோகம்

கிருஷ்ண உணர்வே உன்னத யோகமாகும், இதுவே உன்னத தர்மமும்கூட; ஏனெனில் இது சுயநலமற்றதாக மிளிர்கிறது. எனது சீடர்கள், கிருஷ்ணர் இதைத் தருவார், அதைத் தருவார் என்று எதிர்பார்த்து அவருக்கு சேவை புரிவதில்லை. அஃது, இஃது என்ற தேவை அவர்களுக்கும் இருக்கத்தான் செய்கிறது. இருப்பினும், உண்மையில், இங்கே பற்றாக்குறை என்பதற்கு இடமே இல்லை. பக்தர்கள் தங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவாக பெறுகின்றனர். கிருஷ்ண உணர்வை அடைபவர் ஏழ்மையாகி விடுவார் என்று யாரும் தவறாக நினைத்துவிடக் கூடாது. கிருஷ்ணர் எங்கு இருக்கின்றாரோ, அங்கு அனைத்துமே நிறைவாக இருக்கும்; ஏனெனில், கிருஷ்ணர் என்றும் நிறைவானவர். இதனால், “கிருஷ்ணா எனக்கு இதைக் கொடு, அதைக் கொடு,” என்று கேட்டு வியாபார பரிமாற்றத்தை வைத்துக் கொள்ள நினைக்கக் கூடாது. எவ்வாறு தன் குழந்தையின் தேவைகளை தக்க சமயத்தில் தந்தை பூர்த்தி செய்கின்றாரோ, அவ்வாறே நமக்கு நன்மை தருபவற்றை பகவானும் தக்க சமயத்தில் நிறைவேற்றிக் கொண்டே இருப்பார். அவ்வாறு இருக்கையில், நாம் அவரிடம் கேட்டுப் பெற வேண்டிய அவசியமென்ன? பகவான் மிகவும் சக்தி வாய்ந்தவர், அவர் நமது விருப்பத்தையும் தேவைகளையும் மிகவும் தெளிவாக அறிந்துள்ளார். ஏகோ பஹுனாம் யோ விததாதி காமான், பரம புருஷ பகவான் எண்ணற்ற ஜீவராசிகளின் அனைத்து தேவைகளையும் வாரி வழங்கிக் கொண்டே இருக்கின்றார் என்று வேதங்கள் உரைக்கின்றன.

விஞ்ஞான முன்னேற்றம்: வெறும் வார்த்தைகளே

விஞ்ஞான முன்னேற்றம்: வெறும் வார்த்தைகளே இன்றைய உலகின் விஞ்ஞானிகளில் பலர் தங்களின் கருத்துகளை நிரூபிக்காமல், வெறும் வார்த்தைகளால் வாழ்ந்து வருவது குறித்து ஸ்ரீல பிரபுபாதருக்கும் அவரது சீடரான முனைவர் பக்தி ஸ்வரூப தாமோதர சுவாமிக்கும்...

Latest