AUTHOR NAME

A.C Bhaktivedanta Swami Prabhupada

226 POSTS
0 COMMENTS
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

நான் யார்

ஸ்ரீ பகவான் உவாச இதம் ஷரீரம் கெளந்தேய க்ஷேத்ரம் இத்யபிதீயதே ஏதத் யோவேத்தி தம் ப்ராஹு: க்ஷேத்ரஜ்ஞ இதி தத்-வித: “புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: குந்தியின் மகனே! இந்த உடல், களம் (க்ஷேத்ர) என்று அழைக்கப்படுகின்றது. இவ்வுடலை அறிபவன், களத்தை அறிபவன் (க்ஷேத்ரஜ்ஞ) என்று அழைக்கப்படுகின்றான்.” (பகவத் கீதை 13.2)

பூரணத்தில் ஐக்கியமாகுதல் பேரழிவே

பின்வரும் உரையாடல் தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதருக்கும் அருவவாத தன்மை கொண்ட ரோஸிகுருசியன் திருச்சபையின் அதிகாரியான திரு பேல்ஃபியோரி என்பவருக்கும் இடையிலான கலந்துரையாடல்.

மனித வாழ்வை வீணடிக்க வேண்டாம்

நாயம் தேஹோ தேஹ-பாஜாம் ந்ரு-லோகே கஷ்டான் காமான் அர்ஹதே விட்-புஜாம் யே தபோ திவ்யம் புத்ரகா யேன ஸத்த்வம் ஷுத்த்யேத் யஸ்மாத் ப்ரஹ்ம-ஸெளக்யம் த்வனந்தம் “அன்பு மைந்தர்களே! இவ்வுலகில் பௌதிக உடல்களைப் பெற்றுள்ள உயிர்களுக்கு மத்தியில் மனித உடலைப் பெற்றுள்ளவன் இரவுபகலாக வெறும் புலனுகர்ச்சிக்காக கடினமாக உழைக்கக் கூடாது. இப்புலனுகர்ச்சி மலத்தைத் தின்னும் நாய்களுக்கும் பன்றிகளுக்கும்கூட இருப்பதே. மனிதப் பிறவியைப் பெற்றவன் பக்தித் தொண்டின் தெய்வீக நிலையை அடைவதற்காக தவத்திலும் துறவு நெறிகளிலும் ஈடுபட வேண்டும்.

எப்போதும் பிரபுபாதரின் தொடர்பில் வாழ…

ஸ்ரீல பிரபுபாதர் மும்பையில் இருந்தபோது, பக்தர்களால் அவரை எளிதில் அணுகி, தங்களது கேள்விகளை எழுப்ப முடிந்தது. இருப்பினும், இயக்கம் வளரவளர தமது ஆன்மீக குருவுடன் இது போன்ற நெருங்கிய உறவுகள் கிட்டுமா என்பதில் பஞ்சத்ராவிட ஸ்வாமிக்கு ஐயம் ஏற்பட்டது. அதனை ஸ்ரீல பிரபுபாதரிடமே கேள்வி எழுப்பி விடலாம் என்று எண்ணி, ஒருநாள் அவர் ஸ்ரீல பிரபுபாதரின் அறைக்குச் சென்றார்.

ஏங்கவும் வேண்டாம்! வருந்தவும் வேண்டாம்!

இந்திய மக்கள் குறைந்தபட்சம் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக அடிமைகளாக அடக்கி ஆளப்பட்டதன் காரணத்தினால், அவர்கள் தங்களது கலாச்சாரத்தை இழந்து விட்டனர். ஏழ்மையினால் பாதிக்கப்பட்டிருப்பதால், எந்த வழியிலாவது பணம் கிடைக்குமா என்பதிலேயே அவர்கள் குறியாக உள்ளனர். பகவத் கீதையில், போகைஸ்வர்ய ப்ரஸக்தானாம் தயாபஹ்ருத-சேதஸாம் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, பௌதிகப் புலனின்பத்தில் அதிகமாகப் பற்றுதல் கொண்டிருக்கும் மக்களால் கிருஷ்ண உணர்வைப் புரிந்துகொள்ள முடியாது

Latest