- Advertisement -spot_img

CATEGORY

ஸ்ரீல பிரபுபாதர்

தியானத்தினால் ஏமாறும் மக்கள்

தியானத்தினால் ஏமாறும் மக்கள் தியானம் என்ற பெயரில் மக்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகின்றனர் என்பதுகுறித்து, ஸ்ரீல பிரபுபாதர் தென்னாப்பிரிக்கா சென்றிருந்தபோது திரு. ஃபையில் என்பவருடன் நிகழ்ந்த பேட்டியின் ஒரு...

கிருஷ்ண பக்தனுக்கு எந்த இழப்பும் இல்லை

கிருஷ்ண உணர்வு முற்றிலும் ஆனந்தம் நிறைந்தது; ஏனெனில், அனைத்து பெளதிகத் துன்பங்களிலிருந்தும் விடுதலைப் பெற்ற பின்னரே ஒருவன் இந்நிலையை அடைகிறான். இதுவே ப்ரஹ்ம-பூத நிலை என்று அறியப்படுகிறது. பன்னெடுங் காலமாக சிறைச்சாலையில் துன்பப்படுபவன் திடீரென விடுதலையடையும்போது மிகுந்த மகிழ்ச்சியை உணர்வதைப் போலவே, ப்ரஹ்ம-பூத நிலையை அடைபவன் ஆனந்தத்தை அனுபவிக்கிறான்.

குற்றமற்ற அறிவைப் பெற டார்வினை நம்புவதா? கிருஷ்ணரை நம்புவதா?

குற்றமற்ற, பக்குவமான அறிவைப் பெற விரும்பும் மக்கள் மன அனுமானத்தினால் உருவான டார்வின் போன்ற விஞ்ஞானிகளை ஏற்பதற்கு பதிலாக, குற்றமற்ற நபரிடமிருந்து குற்றமற்ற அறிவைப் பெற வேண்டும் என்பதுகுறித்து ஸ்ரீல பிரபுபாதர் மானுடவியல் ஆராய்ச்சியாளர் முனைவர் கேரோல் கெமெரோனுடன் உரையாடுகிறார். ஸ்ரீல பிரபுபாதர்: நமது வாழ்நாள் எழுபது அல்லது எண்பது வருடங்களே. இருந்தும்கூட டார்வினுடைய கொள்கையைப் பின்பற்றுபவர்கள் இலட்சக்கணக்கான கோடிக்கணக்கான ஆண்டுகளைக் கணக்கிடுகின்றனர்.

எல்லாவற்றிலும் வீற்றுள்ள கிருஷ்ணர்

ஒருநாள் ஸ்ரீல பிரபுபாதர் பூங்கா ஒன்றில் இருந்தபோது, ஆகாயத்தைப் பார்த்த வண்ணம் வினவினார், “கிருஷ்ணர் ஆகாயத்தின் நிறத்தைக் கொண்டுள்ளாரா?” “மழை மேகத்தைப் போல கிருஷ்ணர் கருநீல வண்ணமுடையவர் என்று கிருஷ்ணர் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது,” என்று சீடர் ஒருவர் பதிலளித்தார். “கிருஷ்ணர் ஆகாயத்தின் நிறத்தைக் கொண்டுள்ளார். அவருடைய திருமேனியின் தேஜஸிலிருந்து வரும் ஒளியே ஆகாயத்திற்கு நீல நிறத்தை அளிக்கிறது,” என்று ஸ்ரீல பிரபுபாதர் விளக்கமளித்தார்.

கடவுளை நாங்கள் வழங்குகிறோம், ஏற்பதற்கு ஏன் தயக்கம்?

இறை விஞ்ஞானத்தினைத் தேடுவோர் அதனை ஒரு வரம்பிற்குள் தேடுவதைப் பற்றியும், பகவத் கீதை முதலிய வேத சாஸ்திரங்களை இந்துக்களுடையது என்று கருதி குறுகிய மனப்பான்மையுடன் அவற்றைப் புறக்கணிப்பதைப்...

Latest

- Advertisement -spot_img