உணர்வு பரிணாமம், உடல் பரிணாமம்
ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல்
டாக்டர் சிங்க்: ஸ்ரீல பிரபுபாதரே, 84 இலட்சம் உயிரின வகைகளும் ஒரே சமயத்தில் சிருஷ்டிக்கப்பட்டன என்று நான் பகவத் கீதையில்...
“நான் அனைத்திலும் பரவியிருக்கிறேன், அஃது எனது அருவமான விசேஷத் தன்மை,” என்று கிருஷ்ணர் பகவத் கீதையில் (13.14) கூறுகிறார். கிருஷ்ணர் தனது அருவ தன்மையினால் எல்லாவற்றிலும் இருக்கிறார், ஆனால் அவர் ஒரு நபர். கிருஷ்ணர் அனைத்துமாக மாறிவிட்டால், அவர் நபராக இருப்பது எவ்வாறு சாத்தியம் என்று மாயாவாதிகள் நினைக்கிறார்கள். இது முழு அயோக்கியத்தனம். ஏனென்றால், இது ஜடக் கருத்தாகும், ஆன்மீக அறிவு அல்ல. பௌதிகத்தில் நாம் ஒரு துண்டு பேப்பரை சுக்குநூறாகக் கிழித்தெறிந்தால், உண்மையான பேப்பர் அங்கு இருப்பதில்லை. இதுவே பௌதிகம். ஆனால் எவ்வளவு பகுதிகள் பூரண உண்மையான கிருஷ்ணரிடமிருந்து பிரிந்தாலும், முழுமையானது முழுமையாகவே உள்ளது. இதனை நாம் வேதங் களிலிருந்து அறிகிறோம். பௌதிகமாக ஆராய்ந்தால் ஒன்றிலிருந்து ஒன்றைக் கழித்துவிட்டால் பூஜ்யம். ஆனால் ஆன்மீகமாகப் பார்த்தால், ஒன்றிலிருந்து ஒன்றைக் கழித்தாலும் அந்த ஒன்று ஒன்றாகவே இருக்கிறது, கூட்டினாலும் ஒன்றாகவே இருக்கும்.
இந்தியாவிற்குள் மட்டும் முடங்கிக்கிடந்த, உண்மையில் இந்தியாவிலும் சுருங்கிக் கொண்டிருந்த வைஷ்ணவ தர்மத்தினைத் தனது குருவின் கட்டளைக்கு இணங்க, பாரெங்கும் பரவச் செய்தவர் ஸ்ரீல பிரபுபாதர். ஜடத்தில் மயங்கியிருந்த ஜகத்தை மாற்ற ஜகந்நாதரான மாதவரின் துணையுடன் ஜலதூதா கப்பலில் அவர் படியேறிய அற்புதத் திருநாள் ஆகஸ்ட் 13, 1965. அதன் 50வது நினைவு நாளை உலகெங்கிலும் உள்ள கிருஷ்ண பக்தர்கள் கொண்டாடி வரும் வேளையில், ஸ்ரீல பிரபுபாதரின் அப்பயணம் குறித்து அவரது சீடரான தவத்திரு ஸத்ஸ்வரூப தாஸ கோஸ்வாமி அவர்கள் எழுதிய உங்கள் நலனை என்றும் விரும்பும் பிரபுபாதர் என்னும் நூலிலிருந்து ஒரு சிறு பகுதியினை பகவத் தரிசன வாசகர்களுக்காக இங்கு அர்ப்பணிக்கின்றோம்.
பகவத் கீதையில் விளக்கப்பட்டுள்ள யோக முறையானது, மேலை நாடுகளில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொய்யான யோகத் திலிருந்து வித்தியாசமானதாகும். மேலை நாடுகளில் பெயரளவு யோகிகளால் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் யோக முறையானது அங்கீகரிக்கப்பட்டதல்ல. உண்மையான யோகம் கடினமானதாகும். முதலில் புலன்களை அடக்க வேண்டும், அதுவே யோகியின் நிலை. தன் இச்சைப்படி காம வாழ்க்கை வாழ அவன் அனுமதிக்கப்படுவதில்லை. உங்கள் விருப்பம் போல உடலுறவு கொண்டு, போதை பொருட்களை சாப்பிட்டுக் கொண்டு, மாமிசம் உண்டு கொண்டு, சூதாடிக் கொண்டும் இருந்தால் நீங்கள் ஒரு யோகியாக மாற முடியாது. குடிப் பழக்கம் உங்களுக்கு இருந்தாலும் நீங்கள் யோகியாகலாம் என்று விளம்பரப்படுத்திய ஒரு இந்திய யோகி இங்கு வந்தபோது திகைப்படைந்தேன். இது யோகமுறை அல்ல, யோகம் என்று நீங்கள் இதனை அழைக்கலாம். ஆனால் இது தரமான யோகம் அல்ல.
மனிதன் கீழ்நிலை உடலை அடைதல்
ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல்
ஸ்ரீல பிரபுபாதர்: விஞ்ஞானிகள் என்று கூறிக் கொள்பவர்கள் ஒரு பொய்யான கோட்பாட்டை நம்பியிருக்கிறார்கள், அனைத்தும் ஜடத்திலிருந்து வருவதாக நினைக்கின்றனர். அஹம் ஸர்வஸ்ய...