- Advertisement -spot_img

CATEGORY

ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள்

கிருஷ்ணரை அறிவோம்

“நான் அனைத்திலும் பரவியிருக்கிறேன், அஃது எனது அருவமான விசேஷத் தன்மை,” என்று கிருஷ்ணர் பகவத் கீதையில் (13.14) கூறுகிறார். கிருஷ்ணர் தனது அருவ தன்மையினால் எல்லாவற்றிலும் இருக்கிறார், ஆனால் அவர் ஒரு நபர். கிருஷ்ணர் அனைத்துமாக மாறிவிட்டால், அவர் நபராக இருப்பது எவ்வாறு சாத்தியம் என்று மாயாவாதிகள் நினைக்கிறார்கள். இது முழு அயோக்கியத்தனம். ஏனென்றால், இது ஜடக் கருத்தாகும், ஆன்மீக அறிவு அல்ல. பௌதிகத்தில் நாம் ஒரு துண்டு பேப்பரை சுக்குநூறாகக் கிழித்தெறிந்தால், உண்மையான பேப்பர் அங்கு இருப்பதில்லை. இதுவே பௌதிகம். ஆனால் எவ்வளவு பகுதிகள் பூரண உண்மையான கிருஷ்ணரிடமிருந்து பிரிந்தாலும், முழுமையானது முழுமையாகவே உள்ளது. இதனை நாம் வேதங் களிலிருந்து அறிகிறோம். பௌதிகமாக ஆராய்ந்தால் ஒன்றிலிருந்து ஒன்றைக் கழித்துவிட்டால் பூஜ்யம். ஆனால் ஆன்மீகமாகப் பார்த்தால், ஒன்றிலிருந்து ஒன்றைக் கழித்தாலும் அந்த ஒன்று ஒன்றாகவே இருக்கிறது, கூட்டினாலும் ஒன்றாகவே இருக்கும்.

யோகத்தின் நோக்கம்

பகவத் கீதையில் விளக்கப்பட்டுள்ள யோக முறையானது, மேலை நாடுகளில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொய்யான யோகத் திலிருந்து வித்தியாசமானதாகும். மேலை நாடுகளில் பெயரளவு யோகிகளால் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் யோக முறையானது அங்கீகரிக்கப்பட்டதல்ல. உண்மையான யோகம் கடினமானதாகும். முதலில் புலன்களை அடக்க வேண்டும், அதுவே யோகியின் நிலை. தன் இச்சைப்படி காம வாழ்க்கை வாழ அவன் அனுமதிக்கப்படுவதில்லை. உங்கள் விருப்பம் போல உடலுறவு கொண்டு, போதை பொருட்களை சாப்பிட்டுக் கொண்டு, மாமிசம் உண்டு கொண்டு, சூதாடிக் கொண்டும் இருந்தால் நீங்கள் ஒரு யோகியாக மாற முடியாது. குடிப் பழக்கம் உங்களுக்கு இருந்தாலும் நீங்கள் யோகியாகலாம் என்று விளம்பரப்படுத்திய ஒரு இந்திய யோகி இங்கு வந்தபோது திகைப்படைந்தேன். இது யோகமுறை அல்ல, யோகம் என்று நீங்கள் இதனை அழைக்கலாம். ஆனால் இது தரமான யோகம் அல்ல.

அமைதிக்கான உண்மையான வழி

ஒவ்வோர் உயிரினமும் அமைதியை நாடுகிறது. எறும்பு முதல் பிரபஞ்சத்தில் முதன்முதலில் படைக்கப்பட்ட பிரம்மா வரை அனைவரும் அமைதியைத் தேடுகிறார்கள். அதுவே முக்கியமான நோக்கம். பூரண கிருஷ்ண உணர்வில் இருப்பவன் மட்டுமே அமைதியானவனாக இருக்க முடியும் என்று சைதன்ய மஹாபிரபு கூறியுள்ளார்; ஏனெனில், அவனுக்கென்று எந்த தேவைகளும் இல்லை. இதுவே கிருஷ்ண உணர்வில் இருப்பவனின் விசேஷ தகுதியாகும். அவன் அகாம எனப்படுகிறான். அகாம என்னும் வார்த்தை தன்னில் திருப்தியடைந்த, ஆசைகள் அற்ற, முழு அமைதி பெற்ற ஒருவனைக் குறிப்பதாகும். யார் அப்படி இருக்கிறார்கள்? கிருஷ்ண உணர்வில் நிலைபெற்ற பக்தர்களே அவர்கள் ஆவார்கள்.

கிருஷ்ணரின் மூலமாக அறிவைப் பெறுவோம்

அநேக பல்கலைக் கழகங்களும் கல்வி நிலையங்களும் உள்ளன. ஆனால் அங்கே இத்தகைய விஷயங்கள் விவாதிக்கப்படுவதில்லை. பகவத் கீதையில் கிருஷ்ணர் கொடுக்கும் அறிவு, வேறு எங்கேனும் உள்ளதா? ஒரு தொழில்நுட்ப கல்லூரியில் நான் உரையாற்றியபோது, சில அறிவுள்ள மாணவர்கள், “இறந்த மனிதனுக்கும் உயிருள்ள மனிதனுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை ஆராய்கின்ற தொழில்நுட்பம் எங்கே?” என்று கேட்டார்கள். ஒரு மனிதன் இறக்கும்போது ஏதோ ஒன்று இழக்கப்படுகிறது. அதனை மறுபடியும் பழைய இடத்திலேயே வைக்கும் தொழில் நுட்பம் எங்கே? விஞ்ஞானிகள் ஏன் இந்த பிரச்சனையைத் தீர்க்க முயற்சி செய்யக் கூடாது? ஏனெனில், இது அவர்களுக்கு மாபெரும் தலை வலியைத் தருகின்ற விஷயம். ஆகையால், அவர்கள் இதை விட்டுவிட்டு, சாப்பிடுவது, தூங்குவது, பாதுகாப்பது, உடலுறவு போன்ற தொழில்நுட்பத்தில் மிகவும் சுறுசுறுப்பாக ஈடுபட்டுக் கொண்டிருக் கிறார்கள்.

மானிட, மிருக வாழ்க்கையை தேர்ந்தெடுத்தல்

ரிஷபதேவர் தனது பிள்ளைகளிடம், "வாழ்க்கையைத் தூய்மைபடுத்திக் கொள்வதால் அளவில்லா மகிழ்ச்சியை அடைய முடியும்" என்று அறிவுறுத்தினார். நாம் அனைவரும் அமைதியும் இன்பமும் காணவே விரும்புகிறோம். ஆனால், இப்பௌதிக உலகில் குறைந்த அளவு இன்பத்தையும் அமைதியையுமே பெற முடிகிறது. நம்முடைய இவ்வாழ்வைத் தூய்மைபடுத்தி ஆன்மீக வாழ்வை நாம் எய்தினால், அளவில்லா ஆனந்தத்தையும் அமைதியையும் அனுபவிக்க முடியும்.

Latest

- Advertisement -spot_img