விருத்ராசுரன் கொல்லப்பட்டவுடன் இந்திரனைத் தவிர பிற தேவர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். முனிவர்கள், பித்ருலோகவாசிகள், தேவர்கள், அசுரர்கள் என அனைவரும் தத்தமது இருப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றனர். ஆனால் அவர்கள் இந்திரனிடம் ஒரு வார்த்தைகூட பேசாததால் இந்திரன் மிகவும் துக்கமடைந்தார்.
விருத்ராசுரன் தமது உபசேனாதிபதிகளுக்கு யுத்த தர்மத்தை உபதேசித்தாலும் அவர்கள் அதை ஏற்க மறுத்து மிகுந்த அச்சத்திற்குள்ளாயினர். இச்சூழ்நிலையைப் பயன்படுத்தி தேவர்கள் அசுர சேனைகளைப் பின்புறமாகத் தாக்கி அவர்களை இங்குமங்கும் சிதறியோடச் செய்தனர். அசுரர்களின் பரிதாபமான நிலையைக் கண்ட விருத்ராசுரன் சினம் கொண்டு, தேவர்களைப் பார்த்து பின்வருமாறு பேசினார்:
பகவான் விஷ்ணுவின் அறிவுரையைப் பின்பற்றிய தேவர்கள் தயாள குணமுடைய ததீசி முனிவரை அணுகி அவரது உடலை வேண்டினர். தேவர்களின் கோரிக்கையை முனிவர் உடனே ஏற்றுக் கொண்டாலும், அவர்களுடன் சமயக் கோட்பாடுகளைப் பற்றி சிறிதுநேரம் உரையாட விரும்பி பின்வருமாறு பேசினாபகவான் விஷ்ணுவின் அறிவுரையைப் பின்பற்றிய தேவர்கள் தயாள குணமுடைய ததீசி முனிவரை அணுகி அவரது உடலை வேண்டினர். தேவர்களின் கோரிக்கையை முனிவர் உடனே ஏற்றுக் கொண்டாலும், அவர்களுடன் சமயக் கோட்பாடுகளைப் பற்றி சிறிதுநேரம் உரையாட விரும்பி பின்வருமாறு பேசினார்:
விஸ்வரூபரின் தந்தைவழி உறவினர்கள் தேவர்கள், தாய்வழி உறவினர்கள் அசுரர்கள். அவர் யாகம் செய்தபோது வெளிப்படையாக தேவர்களுக்காகவும் இரகசியமாக அசுரர்களுக்காகவும் யாகத் தீயில் நிவேதனம் அளித்தார். இதைப் புரிந்து கொண்ட இந்திரன் அசுரர்களால் தோற்கடிக்கப்பட்டு விடுவோமோ என்ற பயத்தில், கோபத்துடன் விஸ்வரூபரின் மூன்று தலைகளையும் வெட்டி வீழ்த்தினார்.
ஸ்ரீமத் பாகவதத்தின் முக்கியத்துவம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது லீலைகளை நிறைவேற்றி விட்டு, கோலோக விருந்தாவனத்திற்குத் திரும்பிச் சென்றவுடன், ஸ்ரீமத் பாகவதம் அவரது இலக்கிய அவதாரமாக தோன்றியுள்ளது. இந்த பாகவத சூரியன் கலி யுகத்தின் இருளில் தவிக்கும் மக்களுக்கு ஒளி கொடுப்பதற்காகவே உதயமாகியுள்ளது. (ஸ்ரீமத் பாகவதம் 1.3.43)