இன்றைய சமுதாயமானது பணத்தினை ஈட்டுவது, கட்டுபாடின்றி இன்பம் நுகர்வது போன்ற உணர்வுகளில் வெகு ஆழமாக சென்றுள்ளது. இத்தகைய உணர்வுகளின் விளைவுகள் என்ன என்பதையும் வேதங்கள் நமக்கு உபதேசிக்கும் உணர்வு என்ன என்பதையும் வேதங்கள் உணர்த்தும் உணர்வினை அடைவதால் என்ன பயன் என்பதையும் சற்று விளக்கமாக உணர்வோம்.
காமத்திலே ஈடுபாடு வளரவளர, ஒருவன் தனது நற்குணங்களையெல்லாம் இழக்கிறான். காமத்திலிருந்தே மற்ற அனைத்து கெட்ட குணங்களும் (பேராசை, சுயநலம், வெறுப்புணர்வு மற்றும் கொடூரத்தனம்) வளர்கின்றன. ஸ்ரீல பிரபுபாதர் கூறுவதுண்டு: “பௌதிக உலக வாழ்க்கைக்கு அடிப்படை பாலுறவு வாழ்வே. அசுரர்களுக்கு காமத்தினால் வரும் உடலின்பத்தில் மிகுந்த ஈடுபாடு உண்டு. காமம் அனுபவிக்கும் விருப்பங்களிலிருந்து ஒருவன் எவ்வளவு விடுபடுகிறானோ, அந்த அளவிற்கு அவன் தேவர்களின் நிலைக்கு உயருகிறான். காம விருப்பங்களில் ஒருவன் எவ்வளவு ஈடுபடுகிறானோ, அந்த அளவிற்கு அசுரர்களின் வாழ்விற்கு அவன் தாழ்ந்து போகிறான்.” (ஸ்ரீமத் பாகவதம் 3.20.23)
கலி யுகம் 4,32,000 வருடங்களைக் கொண்டது. தற்போது 5,000 வருடங்கள் கடந்துள்ள நிலையில், மீதமுள்ள 4,27,000 வருடங்களில் தர்மம் மேன்மேலும் படிப்படியாகக் குறைந்து, கலி புருஷன் அதர்மச் செயல்களை உச்ச நிலையில் தலை தூக்கி அரங்கேற்றுவான் என ஸ்ரீமத் பாகவதம் கூறுகின்றது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் துவாபர யுகத்தின் இறுதியில் தன் திவ்யமான லீலைகளை முடித்த பிறகு மீண்டும் ஆன்மீக உலகிற்குச் சென்றார். அதன் பிறகு தோன்றிய கலி புருஷன், ஒருநாள் மூன்று கால்களை இழந்து ஒற்றைக் காலுடன் நின்று கொண்டிருந்த எருதினை மேலும் துன்புறுத்தியபடி, அதன் மீதமிருந்த காலையும் உடைத்துக் கொண்டிருந்தான். (கலி புருஷனின் இச்செயலானது, கலி யுகத்தில் தர்மம் 25 சதவீதத்தில் தொடங்கி, இறுதியில் சூன்யமாகிவிடும் என்பதைக் காட்டுகின்றது) நாட்டைக் காவல் காப்பதற்காக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மாமன்னர் பரீக்ஷித் அக்காட்சியைக் காண நேர்ந்தது. ஒரு சூத்திரன் மன்னரைப் போல உடையணிந்து கொண்டு எருதை வதைப்பதையும் அதனைக் கண்டு பசு கண்ணீர் விட்டு அழுது கொண்டிருப்பதையும் பார்த்த மாத்திரத்தில், மாமன்னர் அவனைக் கொல்வதற்காக வாளை உருவினார்.
நிரந்தரமற்ற துன்பமயமான இவ்வுலகில் பலர் வாழும் கலை பற்றி போதிக்கின்றனர். ஆனால் ஒருவரும் சாகும் கலை பற்றி சொல்வதேயில்லை. மரணம் என்று ஒன்று இருப்பதையே மறந்து விட்டு மனிதர்கள் வாழ்கின்றனர். மாமன்னர் யுதிஷ்டிரரிடம், “எது மிகவும் ஆச்சரியத்திற்குரிய விஷயம்?” என்று கேட்ட போது, தினம் தினம் அடுத்தவர் இறப்பதைப் பார்த்தும் தான் சாக மாட்டேன் என்று ஒவ்வொரு மனிதரும் நினைப்பதே மிகவும் ஆச்சரியமான விஷயம் என்று பதிலளித்தார். மரணத்தை எதிர்கொள்வது எப்படி? இறுதி யாத்திரைக்கு தயார் செய்வது எப்படி?
எனக்குப் பிடித்த நாயகன் என்று ஒவ்வொரு ரசிகனும் யாரேனும் ஒருவரை நம்பியிருந்தான், ஆனால் தனது நாயகனின் தோல்வியினால் நம்பிக்கை இழந்தான். இந்திய அணியினை தோல்வியிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று இறைவனை வேண்டி, வேலூரில் ஓர் இளைஞன் தனது நாவினை வெட்டிக் கொண்ட கொடூரமும் நிகழ்ந்தது. சிலர் யாகங்கள் நடத்தினர், சிலர் சிறப்பு வழிபாடுகளைச் செய்தனர்; ஆனால் தோல்வியே அவர்களைத் தழுவியது.