வழங்கியவர்: ஜீவன கௌரஹரி தாஸ்
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் இருந்து 60 கி.மீ தொலைவில் அழகான கடற்கரை ஓரத்தில் அமைந்திருப்பது ஸ்ரீ ஜகந்நாத புரி க்ஷேத்திரம். கம்பீரமான ஜகந்நாதர் வீற்றிருக்கும் இந்த க்ஷேத்திரத்திற்கு, ஸ்ரீ...
பக்தி யோகத்தின் விதிகளை ஒருவனால் பயிற்சி செய்ய முடியாவிடில், கிருஷ்ணருக்காக மட்டும் வேலை செய்வதற்கு முயற்சிக்க வேண்டும். இத்தகைய நிலையில் இருப்பவன், கிருஷ்ண பக்தியின் செயல்களுக்கு உதவி செய்ய முயற்சி செய்யலாம்; அவ்வாறு செயல்படுபவனும் படிப்படியாக பக்குவநிலையை அடைய முடியும்.
ஒருவனது ஆகாரம் சுத்தமானதாக இருந்தால் அவனது உள்ளமும் உடலும் தூய்மையாக இருக்கும் என்று வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே, உண்ணும் உணவு குறித்து நாம் எப்போதுமே கவனத்துடனும் கண்டிப்புடனும் இருத்தல் வேண்டும். உணவை சமைப்பவரின் அல்லது பரிமாறுபவரின், மனநிலையும் உணர்வு களும் உணவைப் பாதிக்கும். தீய உணர்வுடையோரால் வழங்கப்படும் உணவை உண்பதால், உண்பவரின் மனநிலை பாதிக்கப்படுகிறது. அதுமட்டு மின்றி, உணவு வழங்குபவரின் பாவகர மான கர்மாக்களிலும் (தீவினைகளிலும்) உண்பவர் பங்கெடுத்துக்கொள்ள நேரிடும்.
சங்கம் எடுத்துக் கொள்ளும்பொழுது நாம் நமது உணர்வுகளையும் அனுபவங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். சாது சங்கத்தை ஏற்றுக்கொள்ளும்போது சாதுக்களின் உணர்வுகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறோம். சங்கம் என்றால் மற்றவருக்கான அன்பை வளர்த்துக் கொள்ளுதல் என்று பொருள். குருவின் சங்கத்தை எடுத்துக் கொள்ளும் ஒரு சீடன், அந்த சங்கத்தை திடப்படுத்துவதற்கு நல்ல உறவு தேவை. நல்ல உறவை ஏற்படுத்துவதற்கான ஆறு விஷயங்களை மிகச்சிறந்த கௌடிய வைஷ்ணவ ஆச்சாரியரான ஸ்ரீல ரூப கோஸ்வாமி பிரபுபாதர் தனது படைப்பான உபதேசாமிருதத்தில் (ஸ்லோகம் 4) அழகாக கூறியிருக்கிறார்.