திருக்கோயில்களில் அமைந்திருக்கும் பகவானுடைய திருவிக்ரஹம் அவரது ஒரு குறிப்பிட்ட அவதாரமாகும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது மூல ரூபம், பூரண விரிவம்சங்கள், லீலா அவதாரங்கள், பரமாத்மா என பல வடிவங்களில் பக்தர்களுக்கு எவ்வாறு அருள்பாலிக்கின்றாரோ, அவ்வாறே விக்ரஹ ரூபத்திலும் அருள்பாலிக்கின்றார். பகவானின் இவ்வெல்லா அவதாரங்களையும் வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள், மனு ஸ்மிருதி முதலியவற்றைக் கொண்டு அறியலாம். பகவானுடைய அர்ச்சாவதாரத்தின் (விக்ரஹத்தின்) பெருமைகளை அறிய வேண்டுமெனில், ஆழ்வார்களின் திவ்ய ஸூக்திகளாகிய திவ்ய பிரபந்தங்களை அணுக வேண்டும்.