பிரம்மா தொடர்ந்து பிரார்த்தனைகள் செய்தார்: “பகவானே, உமது பக்தர்கள் உம்மைப் பற்றி முறையாகக் கேட்கும்போதே உம்மைக் காண்கின்றனர். இதனால் அவர்களது இதயம் தூய்மையடைகிறது. அதில் தாங்கள் கருணையுடன் வந்தமர்ந்து தங்களது நித்ய வடிவத்தில் தரிசனம் தருகிறீர்கள். ஆனால் லௌகீகப் பேராசைகளில் ஆட்பட்டு ஆடம்பரமாக உம்மை வழிபடும் தேவர்களிடம் தாங்கள் மனநிறைவு அடைவதில்லை. மேலும், பக்தரல்லாதோர்க்கு தாங்கள் கானல் நீர்போன்று அவர்கள் காண இயலாத வண்ணம் ஒதுங்கி விடுகிறீர்கள்.
ஒருநாள் சின்ன கிருஷ்ணரும் அவரது தோழர்களும் கன்றுகளுடன் யாத்திரையாக காட்டிற்குச் சென்றார்கள். நீண்ட நேரம் விளையாடியதும் அவர்களுக்கு பசி எடுத்தது. "அதோ அந்த நதிக்கரை மிகவும் அழகாக உள்ளது, நாம் அங்கு உட்கார்ந்து சாப்பிடலாம்" என்று கிருஷ்ணர் கூறினார்.
முழுமுதற் கடவுள் கூறினார்: “சாஸ்திரங்களில் விவரிக்கப்பட்டுள்ளதுபோல் என்னைப் பற்றிய அறிவு மிகவும் இரகசியமானதாகும். அதை பக்தித் தொண்டின் உதவியால் மட்டுமே உணர முடியும். அஃது எவ்வாறு என்பதை இப்போது விளக்குகிறேன். அதை கவனத்துடன் கேட்பீராக.