- Advertisement -spot_img

TAG

chaitanya mahaprabhu

ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர்

வழங்கியவர்: ஜீவன கௌரஹரி தாஸ் ஸத்ய யுகத்தில் அசுரர்களும் நல்லோர்களும் வெவ்வேறு லோகத்தில் வசித்தனர் (உதாரணம், ஹிரண்யகசிபு). திரேதா யுகத்தில் அவர்கள் வெவ்வேறு நாடுகளில் வசித்தனர் (உதாரணம், இராவணன்). துவாபர யுகத்தில் அவர்கள் ஒரே...

ஸ்ரீல ஜீவ கோஸ்வாமி

ஜீவ கோஸ்வாமி ஒரு தூய பக்தராகவும், வேத சாஸ்திரங்களில் வல்லவராகவும், பௌதிக ஆசைகளை முற்றிலும் துறந்தவராகவும் இருந்தார். இருப்பினும், ஸ்ரீல ரூப கோஸ்வாமி அவரை மிகவும் சாதாரண பணிகளில் ஈடுபடுத்தினார். சில சமயங்களில், ராதா கோவிந்த விக்ரஹ வழிபாட்டிற்குத் தேவையான பொருட்களை ஏற்பாடு செய்தல், மலர்மாலை தொடுத்தல், இடங்களை சுத்தம் செய்தல், ரூப கோஸ்வாமியின் பாத கமலங்களை பிடித்துவிடுதல், எழுதுவதற்காக ஆலிலைகளை ஏற்பாடு செய்தல், எழுதுகோல் (எழுத்தாணி) செய்தல் போன்ற பல சேவைகளில் ஜீவர் ஈடுபட்டார்.

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் வாழ்க்கையும் கொள்கைகளும்

நித்யானந்த பிரபுவிற்கும் ஹரிதாஸ தாகூருக்கும் அவரளித்த முதல் கட்டளை: “நண்பர்களே, செல்லுங்கள்! நகரத்தின் வீதிகளுக்குச் செல்லுங்கள், வீடுவீடாகச் சென்று ஒவ்வொரு மனிதனையும் சந்தியுங்கள், அவனை தூய வாழ்வுடன் ஹரியின் திருநாமத்தைப் பாடச் சொல்லுங்கள், பின்னர் தினசரி மாலை நேரத்தில் உங்களது பிரச்சாரப் பணியின் பலன்களை எனக்குத் தெரிவிப்பீராக.” இக்கட்டளையைப் பெற்ற இரண்டு பிரச்சாரகர்களும் அதனை தினமும் நிறைவேற்றினர். ஒருமுறை ஜகாய், மதாய் என்னும் இரண்டு வெறுக்கத்தக்க நபர்களை அவர்கள் சந்திக்க நேர்ந்தது. மஹாபிரபுவின் கட்டளையைக் கேட்ட அவர்கள் இரண்டு பிரச்சாரகர்களையும் அவமதித்தனர், இருப்பினும் பகவான் அளித்த பக்தியின் போதனைகளால் கவரப்பட்டு விரைவிலேயே மாற்றப்பட்டனர். இதனால் ஆச்சரியமுற்ற நாதியாவின் மக்கள், “நிமாய் பண்டிதர் ஒரு மிகச்சிறந்த பண்டிதர் மட்டுமல்ல, அவர் நிச்சயமாக வல்லமை பொருந்திய கடவுளால் அனுப்பப்பட்ட தூதரே,” என்று கூறினர். அத்தருணத்திலிருந்து தனது இருபத்திமூன்று வயது வரை அவர் தனது கொள்கைகளை நாதியாவில் மட்டுமின்றி அதனைச் சுற்றியுள்ள இதர கிராமங்களிலும் நகரங்களிலும் பிரச்சாரம் செய்தார். தன்னைப் பின்பற்றுவோரின் இல்லங்களில் அவர் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார், பக்தியின் அந்தரங்க கொள்கைகளைக் கற்றுக் கொடுத்தார், மேலும், இதர பக்தர்களுடன் சங்கீர்த்தனத்தில் ஈடுபட்டார். நாதியா நகரத்திலிருந்த அவரது தொண்டர்கள் ஹரியின் திருநாமத்தை கடைவீதிகளிலும் இதர வீதிகளிலும் பாடத் தொடங்கினர்.

Latest news

- Advertisement -spot_img