இந்திய மக்கள் குறைந்தபட்சம் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக அடிமைகளாக அடக்கி ஆளப்பட்டதன் காரணத்தினால், அவர்கள் தங்களது கலாச்சாரத்தை இழந்து விட்டனர். ஏழ்மையினால் பாதிக்கப்பட்டிருப்பதால், எந்த வழியிலாவது பணம் கிடைக்குமா என்பதிலேயே அவர்கள் குறியாக உள்ளனர். பகவத் கீதையில், போகைஸ்வர்ய ப்ரஸக்தானாம் தயாபஹ்ருத-சேதஸாம் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, பௌதிகப் புலனின்பத்தில் அதிகமாகப் பற்றுதல் கொண்டிருக்கும் மக்களால் கிருஷ்ண உணர்வைப் புரிந்துகொள்ள முடியாது
மலிவான பொருளை வாங்கி விட்டு, அது வீணாகி, மீண்டும்மீண்டும் அதையே வாங்குதல் சரியல்ல; அதுபோல, மலிவான பௌதிக உடலை மீண்டும்மீண்டும் பெறுதல் சரியல்ல என்றும், தரமான ஆன்மீக உடலைப் பெற வேண்டும் என்றும் ஸ்ரீல பிரபுபாதர் அறிவுறுத்துகிறார்.
விருந்தினர்: ஆத்மா எப்போதும் ஓர் உடலிலிருந்து மற்றோர் உடலுக்கு மாறுகிறது என்றால், அஃது எவ்வாறு முக்தி பெறுகின்றது?
1971இல் ஸ்ரீல பிரபுபாதர் சோவியத் யூனியனில் மேற்கொண்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணத்தின்போது சோவியத் விஞ்ஞானக் கழகத்தின் இந்தியத் துறையின் தலைவரும் மாஸ்கோ பல்கலைக்கழகத்தின் இந்தியப் பிரிவின் தலைவருமான பேராசிரியர் க்ரிகோரி கடோவ்ஸ்கியை சந்தித்தார். ஆன்மீகத் தலைவரான ஸ்ரீல பிரபுபாதரும் பொதுவுடைமை அறிஞரான கடோவ்ஸ்கியும் இந்தியாவின் வர்ணாஷ்ரம முறையைப் பற்றி இங்கு விவாதிக்கின்றனர்.
தியானத்தினால் ஏமாறும் மக்கள்
தியானம் என்ற பெயரில் மக்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகின்றனர் என்பதுகுறித்து, ஸ்ரீல பிரபுபாதர் தென்னாப்பிரிக்கா சென்றிருந்தபோது திரு. ஃபையில் என்பவருடன் நிகழ்ந்த பேட்டியின் ஒரு பகுதி.
திரு. ஃபையில்: தியானம் மக்களுக்கு உபயோகமாக...
இறை விஞ்ஞானத்தினைத் தேடுவோர் அதனை ஒரு வரம்பிற்குள் தேடுவதைப் பற்றியும்,
பகவத் கீதை முதலிய வேத சாஸ்திரங்களை இந்துக்களுடையது என்று கருதி குறுகிய மனப்பான்மையுடன் அவற்றைப் புறக்கணிப்பதைப் பற்றியும், தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி...