ஒருநாள், யசோதை கண்ணனின் லீலைகளைப் பாடியபடி தயிர் கடைந்து கொண்டிருந்தாள். அங்கு வந்த கண்ணன் யசோதையின் முந்தானையைப் பிடித்து இழுத்து, அம்மா பசிக்கிறது," என்றார்.
தனது பக்தன் யாருக்கேனும் ஏதேனும் வாக்குறுதி கொடுத்தால் கிருஷ்ணர் அதை நிச்சயம் நிறைவேற்றுவார். சில நேரத்தில் கிருஷ்ணர் தான் கொடுத்த வாக்குறுதியைக்கூட மீறலாம். ஆனால் தனது பக்தன் கொடுத்த வாக்குறுதியை என்றும் மீற மாட்டார். அதனால் தான் தனது பக்தன் என்றும் அழிவடைய மாட்டான் என்று பகவத் கீதையில் (9.31) கிருஷ்ணர் கூறுகிறார். அதையும்கூட பகவான் கிருஷ்ணர் தன்னுடைய பக்தனான அர்ஜுனனைக் கொண்டு கூறுகிறார். அதாவது தனது பக்தனால் ஏதேனும் உரைக்கப்பட்டால், கிருஷ்ணர் அதனை தனது வார்த்தைகளைக் காட்டிலும் முக்கியமானதாக ஏற்கிறார். இது பக்தியின் இரகசியமாகும்.