நெத்தியடியாக அமைந்த படக்கதை
நவம்பர் 2022 பகவத் தரிசனம் மடல் கிடைக்கப் பெற்றேன். தங்கக் கிண்ணமா, பித்தளை கிண்ணமா என்ற தலைப்பில் ஸ்ரீல பிரபுபாதர் வழங்கிய உபதேச கதையும் அதிலிருந்த விளக்கமான கருத்துகளும் அருமையிலும்...
குழந்தை கிருஷ்ணரை யசோதை கயிற்றினால் உரலில் கட்டிப்போட்டாள். உலகையே கட்டிப்போட்டிருக்கும் அந்த கிருஷ்ணரை யசோதை கட்டிப்போட்ட சம்பவம் பக்தர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமானதாகும். தீபாவளி தினத்தன்று நிகழ்ந்த அந்த சம்பவத்தை நினைவுகூர்ந்து, யசோதையைப் போன்ற களங்கமற்ற பக்தியை விரும்பும் பக்தர்கள் அந்த பகவான் தாமோதரருக்கு (கயிற்றினால் உரலில் கட்டப்பட்டவருக்கு) நெய் தீபம் ஏற்றி ஒரு மாதம் முழுவதும் வணங்குகின்றனர்.
நரகாசுரனின் வரலாறு அஸ்ஸாம் மாநிலத்தில், குறிப்பாக பிரபலமான காமாக்யா கோயிலை உள்ளடக்கிய காமரூபம் என்ற பகுதியில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. காமாக்யா தேவியை திருமணம் செய்துகொள்ள விரும்பி நரகாசுரன் செய்த விசித்திர செயல்கள் யாவும் அஸ்ஸாம் மாநிலத்தின் பாரம்பரிய வரலாற்றில் நன்கு அறியப்படும் கதைகளாகும். கௌஹாத்திக்குத் தெற்கிலுள்ள ஒரு மலை நரகாசுரனின் பெயரில் அங்கே அமைந்துள்ளது.
பௌமாசுரன் என்னும் அசுரன், பல்வேறு மன்னர்களின் அரண்மனைகளிலிருந்து 16,000 அரச குமாரியரைக் கடத்திச் சென்று சிறைப்படுத்தியதையும், அற்புத குணங்கள் நிறைந்த முழுமுதற் கடவுள் கிருஷ்ணரால் அவன் கொல்லப் பட்டதையும் ஸ்ரீமத் பாகவதத்தில் பரீக்ஷித் மகாராஜாவிற்கு சுகதேவ கோஸ்வாமி விளக்கியுள்ளார். பொதுவாக எல்லா அசுரர்களும் தேவர்களுக்கு எதிராகவே செயல்படுவார்கள். இந்த பௌமாசுரன் மிகுந்த பலத்தைப் பெற்றபோது, வருணனின் சிம்மாசனத்திலிருந்த குடையை வலுக்கட்டாயமாகப் பிடுங்கியிருந்தான்; தேவர்களின் தாயான அதிதியின் காதணிகளை அபகரித்திருந்தான்; மேலும், ஸ்வர்க லோகத்தைச் சார்ந்த மேரு மலையின் ஒருபகுதியான மணி-பர்வதத்தையும் அவன் கைப்பற்றி யிருந்தான். எனவே, பௌமாசுரனைப் பற்றி பகவான் கிருஷ்ணரிடம் முறையிடுவதற்காக தேவராஜனான இந்திரன் துவாரகைக்கு வந்தான்.