வழங்கியவர்: கிருஷ்ண காமினி தேவி தாஸி
ஐந்தாவது வேதமாகக் கருதப்படுவதும் அளவில் மிகப்பெரியதும் உயர்ந்ததுமான மஹாபாரதம் மாமன்னர் ஜனமேஜயனுக்கு வைசம்பாயனரால் உபதேசிக்கப்பட்டு வேத வியாஸரால் தொகுக்கப்பட்டதாகும். மஹாபாரதத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பல்வேறு பெண்களில்...
ஆன்மீகம் குறைந்து அதர்மம் பெருகி வரும் தற்போதைய கலி காலத்தில், பலர் பகவானையும் அவரின் தூய பக்தர்களையும் கற்பனைக்கு ஏற்றவாறு சித்தரித்து நாவல்கள் எழுதுவதும் திரைப்படம் எடுப்பதுமாக இருக்கிறார்கள். இந்த அசுரர்கள் பகவானையும் பகவத் பக்தர்களையும் பல்வேறு விதங்களில் கேலி செய்கின்றனர். இவ்வரிசையில், பஞ்ச பாண்டவர்களின் பத்தினியாக வாழ்ந்த திரௌபதியையும் சிலர் அவமதிக்கின்றனர். ஐந்து கணவரை ஏற்றபோதிலும், திரௌபதி கற்புக்கரசியே என்பதை இக்கட்டுரையில் சாஸ்திரங்களின் மூலமாக உறுதிப்படுத்துவோம்.