நீங்கள் கடவுளைப் பார்த்துள்ளீர்களா? உங்களால் கடவுளைக் காண்பிக்க முடியுமா? என மக்கள் சில நேரங்களில் கேட்பதுண்டு. அதற்கான பதில், ஆம், நான் கடவுளைப் பார்த்திருக்கிறேன் என்பதே. நான் மட்டுமல்ல நீங்களும் கடவுளைக் காணலாம், அனைவரும் கடவுளைக் காணலாம். ஆனால் அதற்கான தகுதியை முதலில் நீங்கள் பெற்றிருக்க வேண்டும். உதாரணத்திற்கு காரில் பழுது ஏற்பட்டு கார் ஓடாமல் நிற்பதை அனைவருமே காண்கின்றனர். கார் மெக்கானிக்கும் காண்கின்றார். ஆனால் மெக்கானிக்கின் பார்வை மற்றவர்களின் பார்வையிலிருந்து வேறுபட்டுள்ளது.
பகவான் ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மஹாபிரபு யுக தர்மமான ஹரி நாம ஸங்கீர்த்தனத்தைப் பரப்புவதற்காகவும் அதன் மூலம் கிருஷ்ண பிரேமையை தாராளமாக வழங்குவதற்காகவும், இக்கலி யுகத்தில் மறைக்கப்பட்ட அவதாரமாகத் தோன்றினார். இதுவே அவர் தோன்றியதற்கான காரணம் என்று வெளிப்படையாக அறியப்படுகிறது; ஆயினும், கிருஷ்ண லீலையில் தம்மால் நிறைவேற்றிக்கொள்ள இயலாத மூன்று பேராசைகளே அவர் மஹாபிரபுவாக தோன்றியதற்கான அந்தரங்க காரணம் என்று கூறப்படுகிறது. அதாவது, பகவான் இவ்வுலகில் தோன்றுவதற்கும் பேராசையே முக்கிய காரணமாக அமைகிறது. பூரண புருஷோத்தமராகிய பகவான் தன்னில் திருப்தியுற்றவர், அவருக்கென்று எந்த தேவையும் இருப்பதில்லை. அவர் ஆறு ஐஸ்வர்யங்களை (வளங்களை) பூரணமாகக் கொண்டவர்.