வழங்கியவர்: ஸந்தான கிருஷ்ண தாஸ்
இன்றைய உலகில், யாரேனும் ஒருவரிடம் இடுப்பில் காவி, கழுத்தில் மாலை, நெற்றியில் குறி முதலிய ஆன்மீக சின்னம் இருந்தால் போதும், அந்த நபர் கபடதாரியாக இருந்தாலும், அவரை ஆன்மீக...
வேதாந்தமும்
உண்மையான குருவும்
கலாச்சாரம் மற்றும் சமயம் சார்ந்த கட்டுரைகளை மும்பையிலிருந்து வெளியிட்டு வரும் பவன்ஸ் ஜேர்னல் என்னும் பதிப்பகத்தாரினால் எழுப்பப்பட்ட வினாக்களுக்கு ஸ்ரீல பிரபுபாதர் விடையளிக்கிறார்.
(சென்ற இதழின் தொடர்ச்சி)
பக்தர்: அடுத்த கேள்வி, சச்சரவுகள் நிறைந்த...
கிருஷ்ண பக்தி இயக்கத்திற்குப் புதிதாக வருபவர்கள் எழுப்பும் முக்கிய வினாக்களுள் ஒன்று: “இஸ்கானிற்கு வந்து ‘ஹரே கிருஷ்ண’ ஜபம் செய்தால், எனது தோஷங்கள் போகுமா?” செவ்வாய் தோஷம், சனி தோஷம், மாங்கல்ய தோஷம், ராகு தோஷம், ஸர்ப்ப தோஷம், பித்ரு தோஷம், புத்திர தோஷம் என தோஷங்களுக்கு பஞ்சமே இல்லை. ஒருவனது ஜாதகத்தை அலசி ஆராயும்போது, அவனது வாழ்நாள் முழுவதும் ஏதேனும் ஒரு தோஷம் எப்போதும் ஒட்டிக் கொண்டே இருப்பதால், பாமரர் முதல் பண்டிதர் வரை பலரும் பரிகாரத்தைத் தேடி அலைகின்றனர்.
மாஸ்கோ நகரின் கிரெம்ளின் மாளிகையைக் கண்ட ஸ்ரீல பிரபுபாதர் வெகுவிரைவில் கம்யூனிச நாடான சோவியத் யூனியன் சிதைந்து வீழ்ச்சியடையும் என்றும், பெருமளவிலான ரஷ்ய மக்கள், ஹரி நாம ஸங்கீர்த்தனத்தினைப் பரப்பியவரும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரமுமான ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் உபதேசங்களைப் பின்பற்றுவர் என்றும் அன்றே கணித்தார். இறுதியாக, பேராசிரியர் கோதோஸ்கியுடன் சில மணி நேரங்கள் உரையாடிய ஸ்ரீல பிரபுபாதர் கம்யூனிச கொள்கையின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டிய பிறகு தமது குறுகிய ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டார். அதன் பின்னர், அவர் ரஷ்யாவிற்குச் செல்லவில்லை.
இப்போது நாம் அந்த முழுமுதற் கடவுளின் இருப்பிடத்திற்குத் திரும்பிச் செல்ல வேண்டும், எவ்வாறு அங்கு செல்வது, எவ்வாறு வீடுபேறு அடைவது என்பதை அறிய வேண்டும். அதுவே மனித வாழ்வின் குறிக்கோள். நாம் ஏன் இந்த பௌதிக உலகத்துடன் தொடர்பு கொண்டுள்ளோம் என்பதை ஆராய வேண்டியதில்லை. வேத இலக்கியங்களின் வழிகாட்டுதல்கள் ஜோதிடரின் அறிவுரையைப் போன்றவை, அவற்றைக் கொண்டு வீடுபேறு அடைவதற்கான வழியைத் தேட வேண்டும். ஜோதிடர் எவ்வாறு ஏழைக்கு குறிப்புகளைத் தருகிறாரோ, அவ்வாறே வேத நூல்கள் நமக்கு குறிப்புகளைத் தருகின்றன. அதன் மூலமாக நமது தந்தையுடனான இழந்த உறவைப் புதுப்பித்து நாம் பெரும் செல்வந்தர்களாக முடியும்.