- Advertisement -spot_img

TAG

krishna consciousness

அனைத்தையும் நாங்கள் வழிபடுகிறோம்

கிருஷ்ணர் விளக்குகின்றார். “அனைத்தும் என்னில் உள்ளன, ஆனால் எல்லாவற்றிலும் நான் இல்லை." இதுவே அசிந்திய-பேதாபேத தத்துவமாகும்--ஒரே நேரத்தில் ஒற்றுமையும் வேற்றுமையும் கொண்ட தத்துவம். அனைத்தும் கிருஷ்ணரே, ஆனால் நீங்கள் இந்த மேஜையை கிருஷ்ணராக வழிபடக் கூடாது. அவ்வாறு வழிபடுதல் அயோக்கியத்தனம். இந்த சூரிய ஒளியும் ஒருவிதத்தில் சூரியனே, அப்படித்தானே? அதே சமயத்தில் சூரிய ஒளி உங்கள் அறையில் இருந்தால், சூரியனே இருக்கிறது என்று கூற இயலாது. இதுவே அசிந்திய-பேதாபேத தத்துவமாகும்.

இறையுணர்வைப் புதுப்பித்தல்

லஹர்ட்: நீங்கள் கிருஷ்ண பக்தி இயக்கத்தினை அமெரிக்க நாட்டில் எவ்வாறு நிறுவினீர்கள் என்பது குறித்து கூற இயலுமா? ஸ்ரீல பிரபுபாதர்: இந்த பணியைச் செய்யும்படி நான் எனது ஆன்மீக குருவினால் கட்டளையிடப்பட்டேன், அதன்படி நான் அமெரிக்காவிற்கு வந்தேன். நான் இங்கு தனியாக வந்தேன், எந்த உதவியும் பணமும் என்னிடம் இருக்கவில்லை. எப்படியோ நான் இங்கு தொடர்ந்து தங்கிவிட்டேன்

கிருஷ்ணரை அறிவோம்

“நான் அனைத்திலும் பரவியிருக்கிறேன், அஃது எனது அருவமான விசேஷத் தன்மை,” என்று கிருஷ்ணர் பகவத் கீதையில் (13.14) கூறுகிறார். கிருஷ்ணர் தனது அருவ தன்மையினால் எல்லாவற்றிலும் இருக்கிறார், ஆனால் அவர் ஒரு நபர். கிருஷ்ணர் அனைத்துமாக மாறிவிட்டால், அவர் நபராக இருப்பது எவ்வாறு சாத்தியம் என்று மாயாவாதிகள் நினைக்கிறார்கள். இது முழு அயோக்கியத்தனம். ஏனென்றால், இது ஜடக் கருத்தாகும், ஆன்மீக அறிவு அல்ல. பௌதிகத்தில் நாம் ஒரு துண்டு பேப்பரை சுக்குநூறாகக் கிழித்தெறிந்தால், உண்மையான பேப்பர் அங்கு இருப்பதில்லை. இதுவே பௌதிகம். ஆனால் எவ்வளவு பகுதிகள் பூரண உண்மையான கிருஷ்ணரிடமிருந்து பிரிந்தாலும், முழுமையானது முழுமையாகவே உள்ளது. இதனை நாம் வேதங் களிலிருந்து அறிகிறோம். பௌதிகமாக ஆராய்ந்தால் ஒன்றிலிருந்து ஒன்றைக் கழித்துவிட்டால் பூஜ்யம். ஆனால் ஆன்மீகமாகப் பார்த்தால், ஒன்றிலிருந்து ஒன்றைக் கழித்தாலும் அந்த ஒன்று ஒன்றாகவே இருக்கிறது, கூட்டினாலும் ஒன்றாகவே இருக்கும்.

கிருஷ்ண உணர்வுள்ள அரசாங்கத்தை நோக்கி…

நாம் அரசியலை கிருஷ்ண உணர்வை அடிப்படையாகக் கொண்டு அணுகலாம். மேலும், அந்த உணர்வின் அடிப்படையில் உறவுகள் ஏற்படுத்தப்படலாம். அந்த உறவுகள் ஒவ்வொரு குறிப்பிட்ட நபர்களுக்கு மத்தியிலும், மக்களின் மத்தியிலும், இந்த பூமியிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கு மத்தியிலும் ஏற்படுத்தப்பட முடியும். இறுதியாக, அந்த உறவினை கடவுளுக்கும் மக்களுக்குமிடையில் ஏற்படுத்த முடியும்.

உயர்ந்த உணர்வை அடைதல்

கிருஷ்ண உணர்வு என்பது பயிற்சி பெற்ற பக்தி யோகிகளின் மிகவுயர்ந்த யோக நிலையாகும். பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணரால் வழங்கப்பட்டதும் பதஞ்சலியால் பரிந்துரைக்கப்பட்டதுமான யோக முறை இன்றைய மக்கள் பயிலக்கூடிய ஹட யோக முறையிலிருந்து வேறுபட்டதாகும்.

Latest news

- Advertisement -spot_img