எங்கெல்லாம் தர்மத்திற்குத் தொல்லைகள் ஏற்பட்டு (யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத) அதர்மம் ஆதிக்கம் செலுத்துகின்றதோ (அப்யுத்தானம் அதர்மஸ்ய), அப்போதெல்லாம் நான் (கிருஷ்ணர்) தோன்றுகிறேன் (ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்) (பகவத் கீதை 4.7). பௌதிக உலகிலும் இதே கோட்பாடு செயல்படுவதைக் காணலாம். அரசாங்கத்தின் சட்டங்கள் மீறப்படும்போது நிலைமையைச் சரி செய்ய எந்தவொரு குறிப்பிட்ட அரசு அதிகாரியோ போலீஸாரோ அந்த இடத்திற்கு வருகிறார்.
பக்தி என்றால் அன்புத் தொண்டு என்று பொருள். ஒவ்வொரு தொண்டும் தன்னிடம் ஒரு கவர்ந்தீர்க்கும் தன்மையைக் கொண்டுள்ளது, அந்தத் தன்மையே அதை செய்பவரை மேலும் மேலும் அந்தத் தொண்டில் முன்னேற்றமடையச் செய்கிறது. இந்த உலகிலுள்ள ஒவ்வொருவரும் நிரந்தரமாக ஏதாவதொரு தொண்டில் ஈடுபட்டுள்ளோம். அந்தத் தொண்டிற்கான ஊக்கம் நாம் அதிலிருந்து பெறும் இன்பத்தாலேயே கிடைக்கிறது. ஒரு கிருஹஸ்தன் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளின்பால் உள்ள பாசத்தால், இரவு பகலாக உழைக்கிறான்.
மனம் பலன்நோக்குச் செயல்களால் மாசுபடும்போது, உயிர்வாழி ஒரு பௌதிக நிலையிலிருந்து மற்றொன்றிற்கு உயர விருப்பப்படுகிறான். பொதுவாக ஒவ்வொருவரும் தத்தமது பொருளாதார நிலையை முன்னேற்றுவதற்காக அல்லும்பகலும் அரும்பாடுபட்டு உழைக்கிறார்கள். ஒருவன் வேதச் சடங்குகளைப் புரிந்து கொண்டால்கூட, ஸ்வர்க லோகத்திற்குச் செல்லவே ஆசைப்படுகிறான்
கடவுளைப் பற்றி நவீன நாகரிக மனிதனிடம் பலதரப்பட்ட கருத்துகள் இருக்கலாம். குழந்தைகள் ஒரு வயதான மனிதரை தாடியுடன் இருப்பதாகக் கற்பனை செய்கின்றனர், பல இளைஞர்கள் கடவுளை கண்களுக்குப் புலப்படாத சக்தி என்றோ மனக் கற்பனை என்றோ நினைக்கலாம். இந்த உரையில், ஸ்ரீல பிரபுபாதர் கிருஷ்ண உணர்வைப் பற்றிய தத்துவத்தை மிகவும் விளக்கமாக ஆச்சரியப்படத்தக்க வகையில் விளக்குகிறார்.