ஜல்லிக்கட்டு பற்றிய பல்வேறு சர்ச்சைகளை பௌதிக பத்திரிகையில் படித்த மக்கள், பகவான் கிருஷ்ணரின் தெய்வீக ஜல்லிக்கட்டினை இந்த ஆன்மீக பத்திரிகையின் இக்கட்டுரையில் படியுங்கள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஏழு காளைகளை ஒரே சமயத்தில் அடக்கி பேரழகியான சத்யாவை திருமணம் செய்த இந்நிகழ்ச்சி, தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரின் “கிருஷ்ணர், புருஷோத்தமரான முழுமுதற் கடவுள்” என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
கடவுளை இந்து, முஸ்லிம், கிருஸ்துவன் என்று மதத்தின் அடிப்படையில் அணுகாமல், தத்துவத்தின் அடிப்படையில் அணுகுதல் சாலச் சிறந்ததாகும். கிருஷ்ணர் ஒரு இந்துவோ முஸ்லீமோ கிருஸ்தவரோ கிடையாது–அவர் புருஷோத்தமரான முழுமுதற் கடவுள், அனைத்திற்கும் உரிமையாளர், பரம அனுபவிப்பாளர், அனைவருக்கும் உற்ற நண்பன். இக்கருத்துகள் எல்லா இடங்களிலும் பரப்பப்பட்டு, மக்கள் இதனைப் புரிந்துகொள்ளும்போது, உலகம் முழுவதிலும் அமைதியும் வளமும் நிச்சயம் ஏற்படும்.
ஜட வாழ்வின் துன்பத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு உதவுவதற்காக, ஸ்ரீல பிரபுபாதர் வழங்கிய முக்கியமான கட்டளைகளுள் ஒன்று, அவரது புத்தகங்களையும் பத்திரிகைகளையும் விநியோகம் செய்வதாகும். அக்கட்டளையை நிறைவேற்ற பல்வேறு பக்தர்கள் பலவிதமான முயற்சிகளை மேற்கொள்கின்றனர். வீடுகள், கடைவீதிகள், திருவிழாக்கள், பேருந்து நிலையம், புகைவண்டி நிலையம் போன்ற இடங்களை பல்வேறு யுக்திகளுடன் அணுகி, ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களை அவர்கள் விநியோகம் செய்து வருகின்றனர்.
பௌமாசுரன் என்னும் அசுரன், பல்வேறு மன்னர்களின் அரண்மனைகளிலிருந்து 16,000 அரச குமாரியரைக் கடத்திச் சென்று சிறைப்படுத்தியதையும், அற்புத குணங்கள் நிறைந்த முழுமுதற் கடவுள் கிருஷ்ணரால் அவன் கொல்லப் பட்டதையும் ஸ்ரீமத் பாகவதத்தில் பரீக்ஷித் மகாராஜாவிற்கு சுகதேவ கோஸ்வாமி விளக்கியுள்ளார். பொதுவாக எல்லா அசுரர்களும் தேவர்களுக்கு எதிராகவே செயல்படுவார்கள். இந்த பௌமாசுரன் மிகுந்த பலத்தைப் பெற்றபோது, வருணனின் சிம்மாசனத்திலிருந்த குடையை வலுக்கட்டாயமாகப் பிடுங்கியிருந்தான்; தேவர்களின் தாயான அதிதியின் காதணிகளை அபகரித்திருந்தான்; மேலும், ஸ்வர்க லோகத்தைச் சார்ந்த மேரு மலையின் ஒருபகுதியான மணி-பர்வதத்தையும் அவன் கைப்பற்றி யிருந்தான். எனவே, பௌமாசுரனைப் பற்றி பகவான் கிருஷ்ணரிடம் முறையிடுவதற்காக தேவராஜனான இந்திரன் துவாரகைக்கு வந்தான்.