- Advertisement -spot_img

TAG

memories

செல்வந்தரின் மகனை கஞ்சன் என்ற பிரபுபாதர்

மஹாபுத்தி தாஸர் ஸ்ரீல பிரபுபாதரை முதன்முதலாக சந்தித்தபோது அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் அச்சமயத்தில் அவரது பெயர் ராண்டி. அவர் செம்பட்டை நிறம் கொண்ட நீண்ட முடியுடன் காணப்படுவார், சான்டியாகோ மாநில பல்கலைக்கழகத்தில் கால்பந்து வீரராகவும், மாணவர் சங்க தலைவராகவும், மாபெரும் செல்வந்த பெற்றோர்களின் மகனாகவும் இருந்தார். அவர் லாஸ்ஏஞ்சல்ஸ் கோயிலில் ஸங்கீர்த்தனத்தில் பங்குகொண்டபோது, பிரபுபாதரின் செயலாளர் அவரை மாடியில் இருந்த பிரபுபாதரின் அறைக்கு அழைத்துச் சென்றார். ராண்டி மகிழ்ச்சியுடன் அங்கு சென்றார். ஆயினும், பிரபுபாதரின் அறைக்குள் நுழைந்தபோது, அங்கே தான் மட்டுமே விருந்தாளியாக இருப்பதைக் கண்டார்.

தந்திரக்கார பிரபுபாதர்

ஜகதீஸ கோஸ்வாமி மற்றும் ஷததண்ய ஸ்வாமியின் பேட்டியிலிருந்து மதுத்வீஸ தாஸர் மும்பை இஸ்கானின் தலைவராக இருந்தார். ஆயினும், இந்தியர்களுடன் இணைந்து சேவை புரிவதில் அவர் தமக்கிருந்த அதிருப்தியை பிரபுபாதரிடம் தெரிவித்தார், தமக்கு வேறொரு பிரச்சாரத்...

மொட்டைத் தலையும் வெறும் காலும்

ஒரு மாலை வேளையில், இலண்டனில் உள்ள பக்திவேதாந்த பண்ணையில், ஸ்ரீல பிரபுபாதர் சீடர்கள் சிலருடனும் விருந்தினர்களுடனும் தமது அறையில் அமர்ந்திருந்தார். ஸ்ரீல பிரபுபாதரை பேட்டி காண வந்த ஒரு பெண் நிருபரும் அங்கே இருந்தார். மிதமான கோடைகாலமாக இருந்தபோதிலும், அந்த பெண் நிருபர் குட்டைப் பாவாடையே அணிந்திருந்தார். ஹரே கிருஷ்ண இயக்கத்தைப் பற்றி அவள் எழுப்பிய சில வினாக்களிலிருந்து, அவளுடைய சந்தேகமும் குறை காணும் மனோபாவமும் வெளிப்பட்டன.

Latest news

- Advertisement -spot_img