—ராஜேந்திர நந்தனரிடமிருந்து
ஹைதராபாத்தில் விக்ரஹங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டபோது தென்னிந்திய பிராமணர்கள் சிலர் வந்திருந்தனர். உண்மையான பிராமணர்களான இவர்களை நல்லவிதமாக உபசரிக்குமாறும் அவர்களுக்கு தேவையானவற்றை வழங்குமாறும், யஷோதநந்தன ஸ்வாமி, அச்சுதானந்த ஸ்வாமிகளிடம் ஸ்ரீல பிரபுபாதர் கூறினார்....
ஜட வாழ்வின் துன்பத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு உதவுவதற்காக, ஸ்ரீல பிரபுபாதர் வழங்கிய முக்கியமான கட்டளைகளுள் ஒன்று, அவரது புத்தகங்களையும் பத்திரிகைகளையும் விநியோகம் செய்வதாகும். அக்கட்டளையை நிறைவேற்ற பல்வேறு பக்தர்கள் பலவிதமான முயற்சிகளை மேற்கொள்கின்றனர். வீடுகள், கடைவீதிகள், திருவிழாக்கள், பேருந்து நிலையம், புகைவண்டி நிலையம் போன்ற இடங்களை பல்வேறு யுக்திகளுடன் அணுகி, ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களை அவர்கள் விநியோகம் செய்து வருகின்றனர்.