புத்தகம் விற்பவர், பூஜாரி: யார் பெரியவர்?

Must read

—ஸத்ஸ்வரூப தாஸ கோஸ்வாமியின் நினைவுகளிலிருந்து

பிரபுபாதர் எளிதில் திருப்தியடைபவராகக் காணப்பட்டார். தமது சீடர்களின் சேவையினைப் பாராட்டி அவரளித்த கூற்றுகளும் கடிதங்களும் எண்ணற்றவை. புத்தக விநியோகம், பிரச்சாரம், புதிய கோயில்களைத் திறத்தல், விக்ரஹ வழிபாடு, வரைபடங்கள், கணவனும் மனைவியும் ஒருங்கிணைந்து பிரச்சாரம் செய்தல் என பலவற்றில் அவர் திருப்தியடைந்தார். குரு சீடனின் உறவைப் புரிந்து கொண்டு, உடலாலும் மனதாலும் வார்த்தையாலும் தொண்டாற்ற முயலும் எல்லா சீடர்களாலும் அவர் திருப்தியடைந்தார்.

ஸ்ரீல பிரபுபாதர் புத்தக விநியோகத்தைப் போன்ற சிறப்பான தொண்டுகளை வலுவாக ஊக்குவித்தார். ஆயினும், ஆன்மீக குருவின் கட்டளையினை உயிர்மூச்சாக ஏற்று செயல்படுபவர் யாராக இருந்தாலும், அவரால் பிரபுபாதர் திருப்தியடைந்தார். பிரபுபாதரை திருப்தி செய்தல் என்பது ஒருவர் செய்யும் சேவையை அடிப்படையாகக் கொண்டதல்ல, சேவையில் எவ்வாறு முழுமையாக ஈடுபடுகிறோம் என்பதைப் பொறுத்ததாகும். ஸ்ரீல பிரபுபாதரை திருப்தி செய்வதற்கான சரியான வழி இதுவே.

1975இல், இஸ்கான் பக்தர்கள் சிலருக்கு மத்தியில், சேவைகளுக்கு இடையிலான சிறப்பினைப் பற்றிய வாதங்கள் ஏற்பட்டன. ஸங்கீர்த்தன சேவையே (புத்தக விநியோகமே) மிகவுயர்ந்தது என்றும், விக்ரஹ வழிபாடு ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கானது என்றும் சிலர் தெரிவித்தனர். பிரபுபாதர் புத்தக விநியோகத்தினால் அதிகம் திருப்தியடைகிறார் என்பதை அவர்கள் சான்றாக முன்வைத்தனர். ஆயினும், பிரபுபாதரோ அத்தகு வாத விவாதங்கள் குழந்தைத்தனமானவை என்று பதிலளித்தார். “கிருஷ்ணரின் தொண்டில் கீழ்நிலை, உயர்நிலை என்று ஏதுமில்லை! ஒரு குறிப்பிட்ட சேவையினை உயர்ந்தது என்றோ தாழ்ந்தது என்றோ நினைப்பவன் பக்தித் தொண்டின் மதிப்பினை இன்னும் உணரவில்லை. கிருஷ்ணர் பல தரப்பட்ட தொண்டுகளை அனுபவிக்கின்றார். பக்தி என்பது ஒரு குறிப்பிட்ட சேவையில் முடங்கி விடுவதில்லை.”

ஜய ஸ்ரீல பிரபுபாத!!!

மூலம்: ஸத்ஸ்வரூப தாஸ கோஸ்வாமி வழங்கிய Prabhupāda Appreciation என்னும் நூலின் இரண்டாவது அத்தியாயத்திலிருந்து.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives