பக்தனானவன் ஒருபோதும் அபாயங்களால் சஞ்சலமடைவதில்லை, துயரங்களும் வாழ்வின் சிக்கல்களும் அவனை சஞ்சலப்படுத்துவதில்லை. மாறாக, அவன் அவற்றை வரவேற்கின்றான். அவன் சரணடைந்த ஆத்மாவாக இருப்பதால் அபாயங்களும் நன்மைகளும் கிருஷ்ணரால் வழங்கப்படும் பல்வேறு தோற்றங்களே என்பதை அவன் அறிந்துள்ளான்.
புகழுடனும் பக்தியுடனும் பாரதத்தினை ஆட்சி செய்து வந்த மாமன்னர் பரதர், ஒரு மானிடம் கொண்ட அதீத பற்றுதலால், மானாகப் பிறந்து ஒரு பிறவியை வீணடித்த வரலாறு ஸ்ரீமத் பாகவதத்தின் ஐந்தாம் காண்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் சுருக்கம் இங்கே பகவத் தரிசனத்தின் வாசகர்களுக்காக.