- Advertisement -spot_img

TAG

spiritual master

தௌம்யரும் முத்தான மூன்று சீடர்களும்

வழங்கியவர்: ஸந்தான கிருஷ்ண தாஸ் இன்றைய உலகில், யாரேனும் ஒருவரிடம் இடுப்பில் காவி, கழுத்தில் மாலை, நெற்றியில் குறி முதலிய ஆன்மீக சின்னம் இருந்தால் போதும், அந்த நபர் கபடதாரியாக இருந்தாலும், அவரை ஆன்மீக...

புத்தகம் விற்பவர், பூஜாரி: யார் பெரியவர்?

—ஸத்ஸ்வரூப தாஸ கோஸ்வாமியின் நினைவுகளிலிருந்து பிரபுபாதர் எளிதில் திருப்தியடைபவராகக் காணப்பட்டார். தமது சீடர்களின் சேவையினைப் பாராட்டி அவரளித்த கூற்றுகளும் கடிதங்களும் எண்ணற்றவை. புத்தக விநியோகம், பிரச்சாரம், புதிய கோயில்களைத் திறத்தல், விக்ரஹ வழிபாடு, வரைபடங்கள்,...

நமக்காக பகவான் மேற்கொள்ளும் எண்ணற்ற அவதாரங்கள்

கடல் அலைகளுக்கு எவ்வாறு எல்லை இல்லையோ, அதைப் போலவே பகவானின் அவதாரங்களுக்கும் எல்லை இல்லை. ஸத்த்வ–நிதே. நிதி என்பதன் பொருள் “கடல்,” ஸத்த்வ என்பதன் பொருள் “இருப்பு.” ஸத்த்வ என்பதன் மற்றொரு பொருள் ஸத்வ குணம். இந்த ஜடவுலகில் மூன்று குணங்கள் உள்ளன: ஸத்வ குணம் (நற்குணம்), ரஜோ குணம் (தீவிர குணம்), மற்றும் தமோ குணம் (அறியாமை குணம்). ஆயினும், உண்மையான ஸத்வம் ஆன்மீக லோகத்தில்தான் உள்ளது. ஜடவுலகிலுள்ள ஸத்வ குணம் இங்கே மிகவுயர்ந்த குணமாகக் கருதப்பட்டாலும், ரஜோ மற்றும் தமோ குணங்களால் பாதிக்கப்படக்கூடியதாகும். ரஜோ குணமும் தமோ குணமும் எவ்வாறு கட்டுண்ட வாழ்விற்கு காரணமாக அமைகின்றனவோ, அவ்வாறே ஜட ரீதியிலான ஸத்வ குணமும் கட்டுண்ட வாழ்விற்கு காரணமாக அமைகிறது. எனவே, ஜட ரீதியிலான ஸத்வ குணத்தையும் நாம் கடந்தாக வேண்டும். தூய ஸத்வ குணத்தில் நாம் நிலைபெற்றுவிட்டால், அதுவே ஆன்மீக வாழ்க்கை. தூய பக்தித் தொண்டினால் மட்டுமே தூய ஸத்வ குணத்தில் நிலைத்திருக்க முடியும். இல்லாவிடில், ஸத்வ குணமும் களங்கப்பட்டு விடும்.

சமூக வலைத்தளங்கள் ஆன்மீகத்தை அறிய உதவுமா?

உலகம் வானொலியால் சுருங்கியது, தொலைக்காட்சியால் சுருங்கியது, இணையத்தால் மேலும் சுருங்கியது; இன்றோ சமூக வலைத்தளங்களால் மேன்மேலும் சுருங்கியுள்ளது. பத்திரிகை, தொலைக்காட்சி முதலிய பெரியபெரிய ஊடகங்களைக் காட்டிலும், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் முதலிய சமூக ஊடகங்கள் இன்று மக்களை ஆக்கிரமித்துள்ளன. இவற்றில் இல்லாதவர்களை இன்றைய உலகம் வினோதமாகக் காண்கிறது. ஆன்மீகத்தை அறிய ஆவல் கொண்டுள்ள நபர்களும்கூட, இவற்றின் மூலமாக ஆன்மீக விஷயங்களைப் பெற விரும்புகின்றனர். எந்த அளவிற்கு அது சாத்தியம் என்பதை விவாதிக்கலாம்.

கிருஷ்ண உணர்விற்கு அவசரமா?

நமக்கும் இறைவனுக்கும் இடையிலான உறவு மட்டுமே உண்மையான உறவு என்பதைப் புரிந்து கொண்டு அதன்படி நடப்பதே நமது கடமை; அவ்வாறு நாம் செயல்பட்டால் நமது வாழ்க்கை வெற்றியடையும். ஆனால் சில சமயங்களில், கடவுள் இல்லை”, நானே கடவுள்”, கடவுளைப் பற்றி எனக்குக் கவலையில்லை” என்று சிலர் சவால் விடுவதும் உண்டு. இவ்வாறு சவால் விடுவதால் யாரும் காப்பாற்றப்படப் போவதில்லை. கடவுள் இருப்பதை ஒவ்வொரு கணமும் நம்மால் காண முடியும். வாழும்பொழுது கடவுளை ஏற்க மறுத்தால், கொடூரமான மரணத்தின் வடிவில் அவர் நம்முன் தோன்றுவார். நாம் அவரை ஒரு குறிப்பிட்ட உருவத்தில் காண விரும்பாவிடில், வேறோர் உருவத்தில் அவரை நாம் காண வேண்டிவரும். விஸ்வரூபத்தின் மூல காரணமாகத் திகழும் முழுமுதற் கடவுளுக்குப் பல்வேறு ரூபங்கள் உள்ளன. வேறுவிதமாகக் கூறினால், அவரிடமிருந்து யாரும் தப்பிக்க முடியாது.

Latest news

- Advertisement -spot_img