- Advertisement -spot_img

TAG

srila prabhupada lecture

உண்மையான புத்தியை அறிவோம்

வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் புத்திர் ஜ்ஞானம் அஸம்மோஹ: க்ஷமா ஸத்யம் தம: ஷம: ஸுகம் து:கம் பவோ ’பாவோ பயம் சாபயம் ஏவ ச அஹிம்ஸா ஸமதா துஷ்டிஸ் தபோ தானம் யஷோ ’யஷ: பவந்தி பாவா பூதானாம் மத்த...

மனித வாழ்வை வீணடிக்க வேண்டாம்

நாயம் தேஹோ தேஹ-பாஜாம் ந்ரு-லோகே கஷ்டான் காமான் அர்ஹதே விட்-புஜாம் யே தபோ திவ்யம் புத்ரகா யேன ஸத்த்வம் ஷுத்த்யேத் யஸ்மாத் ப்ரஹ்ம-ஸெளக்யம் த்வனந்தம் “அன்பு மைந்தர்களே! இவ்வுலகில் பௌதிக உடல்களைப் பெற்றுள்ள உயிர்களுக்கு மத்தியில் மனித உடலைப் பெற்றுள்ளவன் இரவுபகலாக வெறும் புலனுகர்ச்சிக்காக கடினமாக உழைக்கக் கூடாது. இப்புலனுகர்ச்சி மலத்தைத் தின்னும் நாய்களுக்கும் பன்றிகளுக்கும்கூட இருப்பதே. மனிதப் பிறவியைப் பெற்றவன் பக்தித் தொண்டின் தெய்வீக நிலையை அடைவதற்காக தவத்திலும் துறவு நெறிகளிலும் ஈடுபட வேண்டும்.

துயருற்றவர்களின் மீது பக்தர்களின் கருணை

பரீக்ஷித் மஹாராஜர் நரக லோகங்களைப் பற்றிய விவரங்களை சுகதேவ கோஸ்வாமியிடமிருந்து கேட்டறிந்தவுடன், மக்களை அதிலிருந்து எவ்வாறு விடுவிப்பது என்று வினவினார். அவர் ஒரு வைஷ்ணவர் (பக்தர்). வைஷ்ணவன் எப்போதும் பிறரின் துன்பத்திற்காக வருந்துபவன், பிறரின் துயரங்கள் அவனை மிகவும் வாட்டும். எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாயினும் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களாயினும், எல்லா வைஷ்ணவர்களும் அதாவது பக்தர்கள் அனைவரும் கடவுள் உணர்வுள்ளவர்கள், கருணையுள்ளம் படைத்தவர்கள் ஆவர்.

நாட்டை ஆன்மீகத் தளத்தில் அமையுங்கள்

மனிதப் பிறவி பற்பல கோடிக்கணக்கான ஆண்டுகளின் பரிணாம வளர்ச்சிக்குப்பின் பெறப்பட்டுள்ளது. பத்ம புராணத்தின்படி 84,00,000 உயிரின வகைகள் உள்ளன என்பதை நாம் நினைவிற்கொள்ள வேண்டும். ஆத்மா மனிதப் பிறவிகளில் மட்டுமே உள்ளது என்பதல்ல. நாம் எல்லாரும்—மிருகங்கள், பறவைகள், ஊர்வன, பூச்சிகள், மரங்கள், செடிகள், நீர்வாழ் இனங்கள் என அனைவருமே ஆத்மாக்களே. ஆத்மா பல வகையான உடைகளால் மறைக்கப்பட்டுள்ளது. இஃது உங்களில் சிலர் சிவப்பு நிறத்திலும் சிலர் பச்சை, வெள்ளை நிறங்களிலும் வகைவகையாக உடை அணிந்திருப்பதைப் போன்றது. ஆனால் நாங்கள் உடைகளுக்கு (உடலுக்கு) முக்கியத்துவம் கொடுப்பதில்லை; ஆத்மாவிற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்.

கிருஷ்ண பக்தனுக்கு எந்த இழப்பும் இல்லை

கிருஷ்ண உணர்வு முற்றிலும் ஆனந்தம் நிறைந்தது; ஏனெனில், அனைத்து பெளதிகத் துன்பங்களிலிருந்தும் விடுதலைப் பெற்ற பின்னரே ஒருவன் இந்நிலையை அடைகிறான். இதுவே ப்ரஹ்ம-பூத நிலை என்று அறியப்படுகிறது. பன்னெடுங் காலமாக சிறைச்சாலையில் துன்பப்படுபவன் திடீரென விடுதலையடையும்போது மிகுந்த மகிழ்ச்சியை உணர்வதைப் போலவே, ப்ரஹ்ம-பூத நிலையை அடைபவன் ஆனந்தத்தை அனுபவிக்கிறான்.

Latest news

- Advertisement -spot_img