ஸ்ரீல பிரபுபாதருக்கும் சமூக நல பணியாளரான அசோக் சுகனிக்கும் இடையே மும்பையில் நிகழ்ந்த உரையாடல்.
திரு.சுகனி: உங்களது கிருஷ்ண பக்தி இயக்கம் இந்தியாவில் மிகவும் சிறப்பான செயல்களைப் புரிந்து வருகிறது. எங்களது வெற்றியையும் உங்களுக்குத் தெரியப்படுத்த...
ஜாதி அமைப்பும் பெண் விடுதலையும்
கீதையில் கூறப்பட்டுள்ள வர்ணாஷ்ரம அமைப்பிற்கும், நடைமுறையில் கடைபிடிக்கப்பட்டு வரும் ஜாதி அமைப்பிற்கும் உள்ள வேறுபாட்டினையும், பெண் விடுதலை குறித்தும் ஸ்ரீல பிரபுபாதர் ஜூலை 1975இல் ஸாண்டி நிக்ஸன் எனும்...
தூய்மையும் சுதந்திரமும்
ஆன்மீக வாழ்விற்கு அகத்தூய்மை அவசியமா புறத்தூய்மை அவசியமா, ஆன்மீக வாழ்க்கை என்பது சுதந்திரத்தை இழப்பதாகுமா என்பன குறித்து ஸ்ரீல பிரபுபாதருக்கும் தன்னேர் என்ற பாதிரியாருக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடல்.
பாதிரியார் தன்னேர்: ஆன்மீக...
வேத இலக்கியங்களில் இந்து சமயம் எனும் வார்த்தையே கிடையாது. சமயம் என்பது ஒருவகையான நம்பிக்கையல்ல. தர்மம் (அல்லது சமயம்) என்பது உயிர்வாழியின் நித்திய இயற்கை. இதனை இரசாயனக் கலவையுடன் ஒப்பிடலாம். சர்க்கரை இனிப்பானதுஶீஅதுவே அதன் இயற்கைத் தன்மை, தர்மம். சர்க்கரை என்பது இனிப்பாகத்தான் இருக்க வேண்டும், காரமாக இருக்கவியலாது. மிளகாய் காரமாகவே இருக்க வேண்டும், இனிப்பானதாக இருந்தால் அதனை நிராகரித்து விடுவோம். சர்க்கரை காரத்தன்மையுடன் இருந்தால், அதனை நிராகரித்து விடுவோம்.
கடவுள்குறித்து கேட்பதற்குக்கூட மக்கள் தயாராக இல்லை, இந்த நிலைக்கு காரணம் என்ன? போஸ்டனில் பாதிரியார் ஒருவரிடம் நான் உரையாடிக் கொண்டிருந்தபோது அவர் கூறினார், உங்களது சீடர்கள் அனைவரும் கிறிஸ்தவம் அல்லது யூத மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். முன்பு அவர்கள் தேவாலயங்களுக்கு வந்ததில்லை, இறைவனைக் குறித்து ஒருபோதும் வினவியதில்லை. ஆனால் இன்று அதே ஆண்களும் பெண்களும் இறைவனுக்காக தங்கள் வாழ்வையே அர்ப்பணித்துள்ளனர்.”