இரண்டு நாள் கழித்து, 19 செப்டம்பர் அன்று ஜலதூத கப்பல் நியூயார்க் துறைமுகத்தை அடைந்தது. முறையான வைஷ்ணவ சந்நியாசியின் தோற்றத்தில் நியூயார்க் நகரத்திற்கு வந்த முதல் நபர் இவரே. அவர் நேரடியாக பென்சில்வேனியாவில் உள்ள பட்லர் பகுதிக்குச் சென்றார், அங்கு அவரை திரு. கோபால் அகர்வால் வரவேற்று தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்.
இரண்டாம் உலகப் போரின் ஒரு காலக் கட்டத்தில், ஆங்கிலேயர்கள் உணவுப் பொருட்களைத் தாங்கிய படகுகளை மூழ்கடித்தனர், பல்வேறு நெல் வயல்களை அழித்தனர்-எதிரிகள் அவற்றைக் கைப்பற்றி விடக் கூடாது என்று பயந்தனர். இது வங்காளத்தில்...
டாக்டர் ஃப்ரேஜர்: ஆன்மீக ஆத்மாவும் உடலும் எப்போதும் வேறுபட்டது என்று நீங்கள் கூறுகிறீர்கள், பக்குவ உணர்வு பெற்ற ஆத்மா உடலின் வலிகளை உணர்கிறதா? வேறுவிதமாகக் கூறினால், கிருஷ்ண உணர்வில் இருப்பவர்களுக்கு உடல் ரீதியிலான நோய்கள் வருமா?
பக்தி என்றால் அன்புத் தொண்டு என்று பொருள். ஒவ்வொரு தொண்டும் தன்னிடம் ஒரு கவர்ந்தீர்க்கும் தன்மையைக் கொண்டுள்ளது, அந்தத் தன்மையே அதை செய்பவரை மேலும் மேலும் அந்தத் தொண்டில் முன்னேற்றமடையச் செய்கிறது. இந்த உலகிலுள்ள ஒவ்வொருவரும் நிரந்தரமாக ஏதாவதொரு தொண்டில் ஈடுபட்டுள்ளோம். அந்தத் தொண்டிற்கான ஊக்கம் நாம் அதிலிருந்து பெறும் இன்பத்தாலேயே கிடைக்கிறது. ஒரு கிருஹஸ்தன் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளின்பால் உள்ள பாசத்தால், இரவு பகலாக உழைக்கிறான்.
டாக்டர் ஃப்ரேஜர்: நீங்கள் கூறுவதை என்னால் எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. கிருஷ்ண உணர்வு என்பது மிகவும் இயற்கையான ஒன்றை பின்பற்றுவதாக தோன்றுகிறது. அதிகமாக சாப்பிடுதல், அதிகமாக பாலுறவில் ஈடுபடுதல், அதிகமாக எதைச் செய்தாலும் அது இயற்கையானதல்ல. ஸ்ரீல பிரபுபாதர்: முதலில், நீங்கள் ஆன்மீக ஆத்மா என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் இந்த உடல் அல்ல என்பதே அடிப்படைக் கொள்கையாகும். ஆனால் நீங்கள் இந்த உடலை ஏற்றிருப்பதால், உடலினால் எழும் பலவிதமான துன்பங்களினால் பாதிக்கப்படுகிறீர்கள். நம்முடைய துன்பங்கள் அனைத்தும் இந்த ஜடவுடலைச் சார்ந்ததாகும். எனவே, இந்த பௌதிக உடலே நம்முடைய பிரச்சனையாகும்.