மஞ்சள் மற்றும் இதர நிற உடைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள விட்டலர் வைஜெயந்தி மாலையையும் துளசியையும் கழுத்தில் அணிந்து தரிசனமளிக்கின்றார். வலது கரத்தில் தாமரையும் இடது கரத்தில் சங்கும் வைத்துள்ளார். அவரது மார்பில் பிருகு முனிவரின் திருப்பாதங்கள் பதிந்துள்ளன. அவரது காதுகள் மகர குண்டலத்தினாலும் நெற்றி திலகத்தினாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மிக அருகில் செல்லும் யாத்திரிகர்கள் அவரது புன்சிரிப்பினால் கவரப்பட்டு அதனை வாழ்வின் பக்குவமாக கருதுகின்றனர்.
வழங்கியவர்: ஜீவன கௌரஹரி தாஸ்
ஸத்ய யுகத்தில் அசுரர்களும் நல்லோர்களும் வெவ்வேறு லோகத்தில் வசித்தனர் (உதாரணம், ஹிரண்யகசிபு). திரேதா யுகத்தில் அவர்கள் வெவ்வேறு நாடுகளில் வசித்தனர் (உதாரணம், இராவணன்). துவாபர யுகத்தில் அவர்கள் ஒரே...
உலகளவில் எரிசக்தியின் பயன்பாடு ஒவ்வொரு வருடமும் இரண்டு சதவிகித அளவில் அதிகரித்து வருகிறது. கடைசி இருபது ஆண்டுகளில் எரிசக்தியில் பாதி அளவினை தொழிற்சாலைகள் பயன்படுத்தியுள்ளன என்பது அதிர்ச்சிதரும் தகவல். உலக மக்கள் தொகையில் ஐந்து சதவிகிதம் உள்ள அமெரிக்கர்கள், உலகின் எரிசக்தியில் 25 சதவிகிதத்தை பயன்படுத்துகின்றனர்.
தொன்றுதொட்டு சீரும் சிறப்புமாகத் திகழும் நம் தமிழ் மொழி, செம்மொழி என்னும் சிறப்பைப் பெற்று அதனைத் தற்போது கொண்டாடி வருகிறோம். கலைஞர்கள், அறிஞர்கள், புலவர்கள் என பற்பல சான்றோர்களைப் பெற்றெடுத்த தமிழ்த்தாயைப் போற்றிப் புகழும் இத்தருணத்தில், செம்மொழியான தமிழ் மொழி மெல்லமெல்ல கரைந்து வருவது எவராலும் மறுக்க முடியாத கசப்பான உண்மை. கடையேழு வள்ளல்களைக் கண்ட தமிழ்த்தாய், தற்போது ஈகைத் தன்மையே இல்லாதவர்களைக் காண்கிறாள். கண்ணகியையும் கோப்பெருந்தேவியையும் கண்ட தமிழ்த்தாய், தற்போது கற்பற்ற மங்கையர்கள் பாராட்டப்படுவதைக் கேட்கிறாள். இனிமையான பக்திப் பாடல்களால் அலங்கரிக்கப்பட்ட தமிழ்த்தாய், தற்போது கொச்சையான ஆபாசமான பாடல்களால் சிதறடிக்கப்படுகிறாள். ஏன் இந்த சீர்கேடு? இந்த சீர்கெட்ட நிலை குறித்து சற்று அலசிப் பார்ப்போம்.