மன்னர் கேள்வியெழுப்பிய அச்சமயத்தில், ஆத்ம திருப்தி யுடையவரும் சக்தி வாய்ந்தவருமான ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி அங்கு தோன்றினார். வியாஸதேவரின் புதல்வரான அவர் பதினாறு வயதே நிரம்பியவராக இருந்தார். அவரது பாதங்கள், கைகள், தொடைகள், கரங்கள், தோள்கள், நெற்றி, மற்றும் உடலின் எல்லா பகுதிகளும் நேர்த்தியாக அமைந்திருந்தன. அவரது கண்கள் அகன்றும், மூக்கு எடுப்பாகவும், கழுத்து சங்கு போலவும், முகம் மிகவும் கவர்ச்சியாகவும் விளங்கியது.
வெள்ளை நிற கங்கை நதியும், கருநீல நிற யமுனை நதியும், கண்களுக்குப் புலப்படாமல் பூமிக்கு அடியில் ஓடும் சரஸ்வதி நதியும் ஒன்று கூடுகின்ற இடம் திரிவேணி சங்கமம் என அழைக்கப்படுகின்றது. அமிர்தத் துளிகள் இந்த சங்கமத்தில்தான் சிதறியது என்பதால், இவ்விடத்தில்தான் கும்பமேளாவின் நீராடும் சடங்கு கொண்டாடப்படுகின்றது. காடுகள், இமயமலையின் குகைகள், மற்றும் இந்தியாவின் பல பகுதிகள் மட்டுமின்றி உலகெங்கிலும் இருந்து யாத்ரீகர்கள், யோகிகள், சாதுக்கள் என பலரும் இங்கு வந்து நீராடியுள்ளனர். நாங்கள் மழைக்காலம் முடிந்த தருணத்தில் சென்றதால், கங்கை, யமுனை என இரு நதிகளிலும் நீர்பெருக்கு அதிகமாக இருந்தது. படகில் ஏறி திரிவேணி சங்கமத்தை அடைந்த நாங்கள், அங்கே இரண்டு படகுகளுக்கு இடையில் மூன்றடி ஆழத்தில் மரத்தினால் கட்டப்பட்டிருந்த தளத்தில் நின்றபடி புனித நீராடினோம்.
புரியில் பிறந்த ஸ்ரீல பக்திசித்தாந்தர் அலர்நாத்தை மிகவும் நேசித்தார். இவ்விடம் விருந்தாவனத்திற்கு சமமானது என்றும், இங்குள்ள சிறிய ஏரியானது ராதா குண்டத்திற்கு சமமானது என்றும் அவர் கூறினார். அந்த ஏரியின் கரையில் சைதன்ய மஹாபிரபு ஓய்வெடுப்பதுண்டு. 1929இல் ஸ்ரீல பக்திசித்தாந்தர் அலர்நாத் கோயிலைப் புதுப்பிப்பதற்கும் சுற்றுசுவர் கட்டுவதற்கும் ஏற்பாடுகள் செய்தார். இப்பணியை முடிப்பதில் அவர் எந்த அளவிற்கு பெரும் ஆர்வம் கொண்டார் என்றால், அதற்காக அவர் அங்கு வேலை செய்தவர்களுக்கு பீடி சுருட்டிக் கொடுத்துள்ளார். மேலும், வாமனர், நரசிம்மர், மற்றும் வராஹரின் சிற்பங்களை அவர் கோயிலின் வெளிச்சுவற்றில் பதித்தார்.
ரெமுணா என்பது ஒடிஸா மாநிலத்திலுள்ள ஒரு சிறிய கிராமம், ஆனால் எந்நேரமும் பக்தர்கள் வந்து செல்வதால் சுறுசுறுப்பான இடமாகக் காணப்படுகிறது. இவ்வூர் முழுவதுமே க்ஷீர-சோரா கோபிநாதரின் கோயிலை மையமாக வைத்துதான் செயல்படுகிறது.
இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில், இங்குள்ள மக்கள் பக்தர்களை மகிழ்ச்சி பொங்க வரவேற்பதில் ஆனந்தம் கொள்கின்றனர். இது ரெமுணாவின் நீண்ட காலப் பண்பாட்டை நினைவுபடுத்துகிறது. மாதவேந்திர புரியும் பகவான் சைதன்யரும் எவ்வளவு மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்கள் என்பதை சைதன்ய சரிதாம்ருதத்திலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.
கலி யுகத்திற்கு உகந்த திவ்ய க்ஷேத்திரமான ஜகந்நாத புரிக்கு பெருமை சேர்த்தவர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு என்றால் அது மிகையாகாது. ஜகந்நாத புரியிலுள்ள பல்வேறு முக்கிய ஸ்தலங்கள் அவருடன் தொடர்புடையவை என்பதும், புரிக்கு வருபவர்களில் பெரும்பாலானோர் அவரைப் பின்பற்றுவோர் என்பதும் இதற்கு சான்றாக அமைகின்றது. புரியின் பிரதான ஸ்தலமாகிய ஜகந்நாதரின் திருக்கோயிலைப் பற்றி “தீர்த்த ஸ்தலங்கள்" பிரிவின் சென்ற பகுதியில் (பிப்ரவரி மாத பகவத் தரிசனத்தில்) கண்டோம். இந்த இதழில் புரியிலுள்ள இதர முக்கிய ஸ்தலங்களைப் பற்றி காணலாம்.