வரும் செப்டம்பர் 7, 2019, பாரத மக்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கும் நாளாகும். ஆம்! அன்றைய தினம் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) செலுத்திய சந்திராயன் 2 சந்திரனில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்திர மண்டல ஆராய்ச்சியில் சரித்திரம் படைத்த அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் குழுவில் இந்தியாவும் சேர்ந்து சாதனை படைத்து பேரும் புகழும் பெறும் நாள் வெகு அருகில் உள்ளது என்பதை எண்ணி இந்தியர்கள் பேராவலுடனும் எதிர்பார்ப்புடனும் உள்ளனர். நவீன அரசியல், விஞ்ஞானம், பொருளாதாரம், வலிமை முதலிய பல கோணங்களிலிருந்து பார்க்கையில் இந்த சாதனையை இந்தியா படைக்குமேயாயின் இஃது இந்தியாவிற்கு உலக நாடுகள் மத்தியில் மாபெரும் செல்வாக்கை வழங்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
தெரிந்த கதை தெரியாத துணுக்கு
மாபெரும் பக்தரான நாரதர் பூலோகம், ஸ்வர்க லோகம், வைகுண்டம் என எல்லா இடங்களுக்கும் செல்வதால், திரிலோக சஞ்சாரி என்று அழைக்கப்படுகிறார். இது தெரிந்த கதை. அவர் ஓரிடத்தில் தங்காமல்...