வழங்கியவர்: ஜெய கிருஷ்ண தாஸ்
பெரும்பாலான மக்கள் கடவுளைப் பற்றி யார் என்ன சொன்னாலும் அதனை அப்படியே நம்புகின்றனர். ஒரு சிலர் எப்போதும் இதற்கு நேர் எதிராகவே இருப்பர்; யார் என்ன சொன்னாலும் எவ்வளவு...
— வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்
சமீபத்தில் இந்துத்துவ சிந்தனையில் ஆர்வமுடைய அறிஞர் ஒருவர், “என்னுடைய வழிபாடே உயர்ந்தது என்று கூறுதல் அசுரத்தனம்,” என்று கருத்துரைத்தார். அவரைப் போலவே, “பல்வேறு வழிபாட்டு முறைகளில் பேதம்...
பகவான் விஷ்ணு, பலி மஹாராஜரின் வேள்விச் சாலையில் வாமன தேவராகத் தோன்றி மூன்றடி நிலம் கேட்டு மூவுலகையும் அளப்பதற்காகத் தமது திருவடியைத் தூக்கியபோது, அவரது இடது திருவடியின் பெருவிரல் நகம்பட்டு, பிரபஞ்சத்தின் மேல்பாகம் பிளந்தது. அந்தத் துளை வழியாக காரணக் கடலின் தூய நீரானது கீழிறங்கி கங்கை நதியாக இப்பிரபஞ்சத்திற்குள் வந்தது. ஓராயிரம் வருடங்கள் கீழ்நோக்கிப் பயணித்து, பிரபஞ்சத்தின் மிகவுயர்ந்த இடத்திலுள்ள துருவ லோகத்தை வந்தடைந்தது.
கோயில் இல்லாத ஊர்களில் குடியிருக்க வேண்டாம் என்பர். தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தெய்வீக வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றது. பக்திக்கு பெயர் போன திராவிட தேசத்தில் இன்றும் ஏராளமான வழிப்பாட்டு தலங்கள், கோயில்கள், குளங்கள் காணப்படுகின்றன, இறைவனை வழிபடும் கலாச்சாரம் தமிழ் மக்களின் ரத்தத்தில் ஊறிப்போன விஷயமாகும். அதே சமயத்தில் தற்போதைய காலக்கட்டத்தில் இந்தியாவிலேயே மனிதர்கள் மனிதர்களையே வழிபடும் அவலநிலை கலாச்சாரம் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் பெருகியுள்ளது என்றால் அது நிச்சயம் மிகையல்ல.