கருத்து
பிச்சைக்காரன் தனது பணிவினால் மன்னரின் மனதை மாற்றினான், தன்னுடன் விளையாடிய மன்னருக்கு மனமார ஒத்துழைத்தான். அதனால் அவனுக்கு பெரிய அளவிலான செல்வம் கிட்டியது.
பகவான் சில நேரங்களில் தன்னை நாடிவரும் பக்தர்களை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்துவது வழக்கம். பக்தன் பணிவுடன் அவரது விருப்பத்திற்கு இசைந்து, முழுமையாக சரணடைந்து செயல்படும்பட்சத்தில், பகவான் அவனை ஏற்றுக்கொள்வார். அவர் தமது உண்மையான பக்தர்களை ஒருபோதும் கைவிட மாட்டார்.