அர்ஜுனன் திருநங்கையானது ஏன்?

November, 2017|தெரிந்த கதை தெரியாத துணுக்கு|

பல்வேறு சிறப்பான அஸ்திரங்களைப் பெற விரும்பிய அர்ஜுனன் அதற்காக தேவலோகம் சென்று தனது தந்தை இந்திரனுடன் வசித்து வந்த காலம். ஒருநாள் இந்திரனின் சபையில் தேவலோக மங்கையான ஊர்வசி நாட்டியம் புரிய, அர்ஜுனன் அவளை உற்று நோக்கிக் கொண்டிருந்தான். அதனை இந்திரனும் கவனித்தார். அர்ஜுனன் ஊர்வசியை விரும்புகிறான் என்று தவறாக நினைத்த இந்திரன், அர்ஜுனனுக்கு நாட்டியம் கற்றுக் கொடுத்த சித்திரசேனனை அழைத்து, அர்ஜுனனுக்காக ஊர்வசியை அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டார்.

யசோதைக்குப் பிறந்த கிருஷ்ணர்

August, 2017|தெரிந்த கதை தெரியாத துணுக்கு, பக்தி கதைகள்|

கிருஷ்ணரை தேவகியின் உண்மையான மகன் என்றும், யசோதையின் வளர்ப்பு மகன் என்றும் பெரும்பாலான மக்கள் அறிந்துள்ளனர். சாஸ்திரங்கள் பல்வேறு இடங்களில் இதனைத் தெரிவிக்கின்றன. அதே சமயத்தில், கௌடீய வைஷ்ணவ ஆச்சாரியர்கள் நமக்குத் தெரிவிப்பது யாதெனில், கிருஷ்ணர் ஒரே சமயத்தில் தேவகிக்கு மதுராவிலும் யசோதைக்கு கோகுலத்திலும் பிறந்தார் என்பதே. இது ஹரிவம்ஸ புராணத்திலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அர்ஜுனன் கொள்ளையர்களால் தோற்கடிக்கப்பட்டது ஏன்?

July, 2017|தெரிந்த கதை தெரியாத துணுக்கு, பக்தி கதைகள்|

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இவ்வுலகை விட்டு மறைந்த பின்னர், அவரது 16,108 இராணியர்களை அழைத்துக் கொண்டு அர்ஜுனன் ஹஸ்தினாபுரத்திற்குச் சென்று கொண்டிருந்தான். அச்சமயத்தில், அவனைத் தாக்கிய கொள்ளையர்கள் அவனது பாதுகாப்பிலிருந்த கிருஷ்ணரின் மனைவியர்களைக் கடத்திச் சென்று விட்டனர். இது தெரிந்த கதை. அந்தக் கொள்ளையர்கள் யார், அர்ஜுனன் அவ்வாறு தோல்வியடைய என்ன காரணம் என்பதே தெரியாத துணுக்கு.

நாரதர் எங்கும் பயணம் செய்வது ஏன்?

June, 2017|தெரிந்த கதை தெரியாத துணுக்கு, பக்தி கதைகள்|

தெரிந்த கதை தெரியாத துணுக்கு மாபெரும் பக்தரான நாரதர் பூலோகம், ஸ்வர்க லோகம், வைகுண்டம் என எல்லா இடங்களுக்கும் செல்வதால், திரிலோக சஞ்சாரி என்று அழைக்கப்படுகிறார். இது தெரிந்த கதை. அவர் ஓரிடத்தில் தங்காமல் ஆங்காங்கே அவ்வாறு பயணம் செய்வதற்கு காரணம் என்ன என்பதே தெரியாத துணுக்கு. பிரஜாபதி தக்ஷன் தனது மனைவி பாஞ்சஜனியின் மூலமாக பத்தாயிரம் மகன்களைப் பெற்றெடுத்தார். அம்மகன்கள் ஹர்யஸ்வர்கள் என்று அழைக்கப்பட்டனர். அதிகமான மக்களைப் பெற்றெடுக்க வேண்டும் [...]

குழந்தை பிரகலாதருக்கு உயர்ந்த ஞானம் எவ்வாறு கிடைத்தது?

May, 2017|தெரிந்த கதை தெரியாத துணுக்கு, பக்தி கதைகள்|

பிரகலாதர் கர்ப்பத்தினுள் இருந்தபோதிலும், நாரதரின் திவ்யமான உபதேசங்களைக் கேட்பதற்கான அந்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொண்டார். கயாதுவின் விருப்பப்படி பிரகலாதர் அவளது வயிற்றிலேயே நீண்ட நெடுங்காலம் தங்கியிருந்தார். ஹிரண்யகசிபு தவத்தை முடித்துக் கொண்டு திரும்பி வந்த பின்னர் கயாது மகனைப் பெற்றெடுத்தாள். பெண்ணாக இருந்த கயாதுவினால் நாரதர் வழங்கிய உபதேசங்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை. ஆயினும், நாரதரின் கருணையினால் பிரகலாதர் அவை எல்லாவற்றையும் நினைவில் வைத்திருந்தார்.

இலக்ஷ்மணரின் உயர்ந்த நெறி

April, 2017|தெரிந்த கதை தெரியாத துணுக்கு, பக்தி கதைகள்|

இலக்ஷ்மணரின் உயர்ந்த நிலையைப் பாருங்கள். பன்னிரண்டு வருடங்கள் வேறு யாருமின்றி தனியாக சீதா-இராமருடன் இருந்தபோதிலும், மதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய பிராட்டியாரை கவனமாக ஏறெடுத்தும் பார்த்ததில்லை; மாறாக, என்றென்றும் அவளது தாமரைத் திருவடிகளை தமது தியானத்தில் அமர்த்தியிருந்தார். அவருடைய பக்தியையும் பணிவையும் ஒழுக்கத்தையும் என்னவென்று சொல்வது! நினைத்துப் பூரித்தலே ஆனந்தமளிப்பதாக உள்ளது.

தேவகியின் குழந்தைகள் கம்சனால் கொல்லப்பட்டது ஏன்?

December, 2016|தெரிந்த கதை தெரியாத துணுக்கு, பக்தி கதைகள்|

கிருஷ்ணர் தேவகியின் எட்டாவது மகனாகப் பிறந்து கம்சனை வதம் செய்தார் என்பதும், தேவகிக்கு முதலில் பிறந்த ஆறு குழந்தைகள் கம்சனால் கொல்லப்பட்டனர் என்பதும் தெரிந்த கதை. அக்குழந்தைகள் யார் அவர்கள் ஏன் கம்சனால் கொல்லப்பட்டனர் என்பது தெரியாத துணுக்கு.

தெரிந்த கதை தெரியாத துணுக்கு

November, 2016|தெரிந்த கதை தெரியாத துணுக்கு, பக்தி கதைகள்|

அன்னை சீதையைக் கடத்திச் சென்ற இராவணன், சீதைக்கு ஒரு வருட கால அவகாசம் கொடுத்தான் என்பதும், தன்னை ஏற்காவிடில் கண்டம் துண்டமாக வெட்டி காலை சிற்றுண்டி தயாரித்து விடுவேன் என்று மிரட்டினான் என்பதும் உலகம் அறிந்த உண்மை. இராவணன் சீதையை பலவந்தமாக அனுபவிக்க எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. இதனால் சில முட்டாள்கள் இராவணனை உத்தமன் என்றுகூட போற்றுகின்றனர். இராவணனுக்கு ஏதோ சாபம் இருந்தது என்பதை சிலர் கேட்டிருக்கலாம். அஃது என்ன சாபம், எவ்வாறு யாரிடமிருந்து வந்தது என்பதே இங்குள்ள தெரியாத துணுக்கு.

குசேலருக்கு மறைமுகமாக செல்வம் வழங்கியது ஏன்?

October, 2016|தெரிந்த கதை தெரியாத துணுக்கு, பக்தி கதைகள்|

கிருஷ்ணரின் பால்ய நண்பர் குசேலர் தனது ஏழ்மையை போக்குவதற்காக, கிருஷ்ணர் துவாரகையிலிருந்தபோது அவரைச் சந்திக்கச் சென்றார் என்பதையும், கிருஷ்ணரைச் சந்தித்த மகிழ்ச்சியில் எதையும் கேட்காமல் திரும்பி வந்தார் என்பதையும், கிருஷ்ணர் அவருக்கு இந்திர லோகத்து செல்வத்தைக் காட்டிலும் அதிக செல்வத்தை வழங்கினார் என்பதையும் பெரும்பாலான மக்கள் அறிவர். குசேலர் எதற்காக வந்தார் என்பதை நன்கு அறிந்திருந்த கிருஷ்ணர் தான் கொடுக்க விரும்பியதை அவர் வந்த சமயத்தில் நேரில் கொடுத்திருக்கலாமே? ஏன் முதுகிற்கு பின்னால் கொடுக்க வேண்டும்?