புலனின்பத்தில் நேரத்தை வீணாக்காதீர்கள்

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள்
வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி

யதா பஷ்யத்யயதா குணேஹாம்
ஸ்வார்தே ப்ரமத்த: ஸஹஸா விபஷ்சித்
கத-ஸ்ம்ருதிர் விந்ததி தத்ர தாபான்
ஆஸாத்ய மைதுன்யம் அகாரம் அஜ்ஞ:

“ஒருவன் மிகவும் அறிவுடையவனாக இருந்தாலும், புலனின்பத்திற்கான முயற்சி பயனற்ற கால விரயம் என்பதைப் புரிந்துகொள்ளாவிடில், அவன் பைத்தியம் எனப்படுகிறான். தன்னுடைய சொந்த நன்மையை மறந்துவிட்டதால், அவன் இப்பௌதிக உலகில் மகிழ்ச்சியாக இருக்க முயல்கிறான். அவனது விருப்பங்கள் அனைத்தும் வீட்டை மையமாகக் கொண்டுள்ளன, வீடானது எல்லாவித பௌதிக துன்பங்களையும் கொடுக்கக்கூடிய உடலுறவை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இவ்விதமாக அவன் முட்டாள் மிருகத்தைவிட எவ்விதத்திலும் சிறந்தவன் அல்லன்.” (ஸ்ரீமத் பாகவதம் 5.5.7)

சங்கிலிப் பிணைப்பு

பக்தி வாழ்வின் கீழ்நிலையில் இருப்பவர் கலப்படமற்ற பக்தராக இருப்பதில்லை. அன்யாபிலாஷிதா-ஷூன்யம் ஜ்ஞான- கர்மாத்யனாவ்ருதம், கலப்படமற்ற பக்தராக இருக்க வேண்டுமெனில், எல்லா பௌதிக ஆசைகளிலிருந்தும் விடுபட்டிருக்க வேண்டும்; மேலும், பலன்நோக்குச் செயல்கள், கற்பனையால் பெறப்படும் அறிவு போன்றவற்றால் தீண்டப்படாதவராகவும் இருக்க வேண்டும். கீழ்நிலையில் இருப்பவர் சில நேரங்களில் பக்தியின் சிறிய சாயலுடன் தத்துவ கற்பனைகளில் ஆர்வம் காட்டலாம். இருப்பினும், அந்நிலையில் அவர் இன்னும் புலனின்பத்தில் ஆர்வம் கொண்டவராகவும் பௌதிக குணங்களால் களங்கப்பட்டவராகவும் இருக்கின்றார். மாயையின் தாக்கம் பலமாக இருப்பதால், அறிவில் முன்னேறியவர்கூட, தான் உண்மையில் கிருஷ்ணரின் நித்திய சேவகன் என்பதை மறந்துவிடுகிறார். ஆகையால், பாலுறவை மையமாகக் கொண்ட குடும்ப வாழ்வில் அவர் திருப்தியுடன் இருக்கின்றார். பாலுறவு வாழ்வை ஏற்றதன் மூலமாக, எல்லாவிதமான பௌதிக துன்பத்தின் வலியையும் ஏற்றுக்கொள்ள அவர் சம்மதிக்கின்றார். அறியாமையின் காரணத்தால், பௌதிக சட்டங்கள் என்னும் சங்கிலிகளால் இவ்வாறு அவர் பிணைக்கப்பட்டுள்ளார்.

காமமும் பிரேமையும்

இச்சங்கிலிகளை உடைப்பதே நம்முடைய உண்மையான சுயநலமாகும் (ஸ்வார்த). ஆனால் இதைப் புரிந்துகொள்வதற்கு ஒருவர் விபஷ்சித், அதாவது கற்றவராக இருக்க வேண்டும். பலன்நோக்குச் செயல்களில் ஈடுபடுபவர், மனக் கற்பனையில் ஈடுபடுபவர், யோகி, அல்லது பக்தன் என யாராக இருந்தாலும், ஒவ்வொருவரும் “தனது சொந்த நன்மை” என்று எதை நினைக்கிறார்களோ, அதற்காகவே வேலை செய்கிறார்கள். ஆனால் பக்தர்களைப் பொறுத்தவரையில், இதில் சற்று வித்தியாசம் இருக்கின்றது: அவர்கள் உயர்ந்த நன்மைக்காக வேலை செய்கிறார்கள், மற்றவர்களோ தனிப்பட்ட நன்மைக்காக வேலை செய்கிறார்கள். தன்னுடைய நன்மைக்காக வேலை செய்வதற்கும் உயர்ந்த நன்மைக்காக வேலை செய்வதற்கும் உள்ள வேறுபாடு, காமத்திற்கும் பிரேமைக்கும் (அன்பிற்கும்) உள்ள வேறுபாடாகும். சைதன்ய சரிதாம்ருதத்தில், கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமி இந்த வேறுபாட்டினைத் தெளிவாக விளக்கியுள்ளார்:

ஆத்மேந்த்ரிய-ப்ரீதி-வாஞ்சா-தாரே பலி ‘காம’
க்ருஷ்ணேந்த்ரிய-ப்ரீதி-இச்சா தரே ‘ப்ரேம’ நாம

“தன்னுடைய சொந்த புலனின்பத்திற்காக ஆசைப்படும்போது அது காமம் என்றும், கிருஷ்ணருடைய புலன்களை திருப்தி செய்ய விரும்பும்போது அது பிரேமை (அன்பு) என்றும் அறியப்படுகிறது.” (சைதன்ய சரிதாம்ருதம், ஆதி லீலை 4.165) காமத்திற்கும் அன்பிற்கும் இடையிலான வேறுபாடு பகவத் கீதையில் காட்டப்பட்டுள்ளது. பகவத் கீதையின் ஆரம்பத்தில் அர்ஜுனன் நினைத்தான்: “எனது சகோதரர்கள், சகோதரர்களின் குழந்தைகள், எஜமானர், குரு, மற்றும் பாட்டனாரைக் கொல்வது எவ்வாறு சாத்தியம்? இஃது என்னால் இயலாது; நான் சண்டையிட மாட்டேன்.” தனது குடும்பம், ஆசிரியர் போன்றவர்களின் நன்மைக்கான அர்ஜுனனின் கணக்குகள் எல்லாம் அவனது சொந்த புலனின்பத்திற்காகவே. வேறுவிதமாகக் கூறினால், அவனுடைய சுயநலனிற்காக. ஆனால் பகவத் கீதையின் இறுதியில், போரிடுவதன் மூலமாக கிருஷ்ணரை திருப்தி செய்ய அர்ஜுனன் ஒப்புக் கொண்டபோது, அவன் உயர்ந்த நலனிற்காக செயல்பட்டான். அர்ஜுனன் காமத்திலிருந்து பிரேமைக்குச் சென்றுவிட்டான்.

“தன்னுடைய சொந்த புலனின்பத்திற்காக ஆசைப்படும்போது அது காமம் என்றும், கிருஷ்ணருடைய புலன்களை திருப்தி செய்ய விரும்பும்போது அது பிரேமை (அன்பு) என்றும் அறியப்படுகிறது.”

பரந்த சுயநலத்தின் பக்குவம்

பௌதிகவாதியின் சுயநலம் இரு வகைப்படும்: ஒன்று குறுகிய சுயநலம், மற்றொன்று பரந்த சுயநலம். நீங்கள் ஒரு குழந்தையிடம் ஒரு கேக் துண்டைக் கொடுத்தால், அதன் உடனடி ஆசை தானே முழுமையாக சாப்பிடுவதுதான். ஆனால் அவன் சற்று தாராள மனம் கொண்டவனாக இருந்தால், தனது நண்பனுக்கும் கொஞ்சம் கொடுப்பான். அக்குழந்தை சாப்பிடும்போது, “நீ கேக் சாப்பிடுகிறாயா? எனக்கும் கொஞ்சம் கொடு,” என்று அவனுடைய நண்பன் சொல்வான். அப்போது, “சரி, நீயும் எடுத்துக்கொள்ளலாம்,” என்று அக்குழந்தை பதிலளிக்கும். முதலில் குறுகிய சுயநலனைக் காண்பித்த அக்குழந்தை பின்னர் பரந்த (விரிவடைந்த) சுயநலனைக் காண்பித்தது.

பெரிய அரசியல் தலைவரை மற்றோர் உதாரணமாகக் கொள்ளலாம். அவரது முதல் விருப்பம் தன்னுடைய நன்மையும் தனது குடும்பத்தினரின் நன்மையுமே—தற்காப்பு இயற்கையின் முதல் சட்டமாயிற்றே. இருப்பினும், அவர் தனது ஜாதியினர், இனத்தினர், அல்லது நாட்டினருக்காகவும் உழைக்கின்றார். ஆனால் இத்தகைய பரந்த சுயநலத்தால் ஒருபோதும் பக்குவமடைய முடியாது. ஏனென்றால், ஒரு ஜாதியினருக்கும் மற்றொரு ஜாதியினருக்கும், ஒரு சமூகத்தினருக்கும் மற்றொரு சமூகத்தினருக்கும், ஒரு நாட்டினருக்கும் மற்றொரு நாட்டினருக்கும் என எப்பொழுதும் ஏதாவது சண்டை இருந்து கொண்டேயிருக்கும். அந்த பரந்த சுயநலம் விஷ்ணுவை எட்டும்பொழுது மட்டுமே பக்குவமடைகிறது. அப்பொழுது அது நேர்மையான சுயநலம், அல்லது உயர்ந்த சுயநலம் எனப்படுகிறது.

பக்குவமற்ற பெயரளவு தொண்டுகள்

துரதிர்ஷ்டவசமாக, முழுமுதற் கடவுளான விஷ்ணு அல்லது கிருஷ்ணருக்கு சேவை செய்வதே தங்களின் இறுதியான நன்மை என்பதைப் பற்றிய எந்தவொரு எண்ணமும் இன்றைய மக்களிடம் இல்லை (ந தே விது: ஸ்வார்த-கதிம் ஹி விஷ்ணும்). ஒரு மனிதன் தனது சுயநலத்தை நாட்டிற்கு விரிவடையச் செய்தால், அல்லது மனித இனம் முழுமைக்கும் விரிவடையச் செய்தால், தான் பெரிய மனிதனாக மாறி விட்டதாக நினைத்துக்கொள்கிறான்; மேலும், மக்கள் தனது தயாள குணத்திற்காக மரியாதை செய்வார்கள் என்றும் நினைக்கிறான். ஆனால் இஃது உண்மையான தயாள குணமல்ல; கிருஷ்ணரின் விருப்பத்திற்கு ஏற்ப சேவை செய்வதே உண்மையான தயாள குணமாகும். இல்லையெனில் அது காமம் எனப்படுகிறது. தயாள குணம், சமூகத் தொண்டுகள், பொதுத் தொண்டுகள் போன்ற இன்றைய உலகின் பெயரளவு தொண்டுகள் எதுவுமே பக்குவமானதல்ல; ஏனெனில், அவை நமது உயர்ந்த சுயநலனிற்கு சேவை செய்வதில்லை.
கேக் துண்டின் உதாரணத்தை மீண்டும் உபயோகிக்கலாம். நம் விரல்களால் ஒரு நல்ல கேக் துண்டை எடுக்கின்றோம் என்று வைத்துக்கொள்வோம். “இப்பொழுது இதைப் பெற்றுவிட்டோம், இதனை நாமே அனுபவிக்கலாம்” என்று விரல்கள் நினைத்தால், கேக் கெட்டு விடும். மாறாக, விரல்கள் கேக்கை வாயினுள் வைத்தால், விரல்களும் தங்களின் உண்மையான நலனை அடைய முடியும். கேக் வயிற்றுக்குச் சென்றவுடன், அதன் சக்தியானது வலதுகை விரல்களுக்கு மட்டுமின்றி இடதுகை விரல்களுக்கும், உண்மையில் மொத்த உடலுக்கும் விநியோகிக்கப்படுகிறது. அதுபோல, ஒருவர் கிருஷ்ணரின் நலனுக்காக சேவை செய்தால், எல்லாருடைய நலனும் கவனித்துக்கொள்ளப்படும்; ஏனெனில், கிருஷ்ணரே எல்லாவற்றின் வேராக உள்ளார். மக்கள் இச்சட்டத்தை அறியாமல் உள்ளனர். ஆகையால், ஸ்வார்தே ப்ரமத்த:, மக்கள் தங்களின் உண்மையான சுயநலனைப் பற்றி அறியாமல் உள்ளனர் என ரிஷபதேவர் இங்கே கூறுகிறார். உலகிலுள்ள ஒவ்வொருவரும் தனிப்பட்ட அளவில், சமூக அளவில், தேசிய அளவில் என தங்களின் சுயநலனிற்கு சேவை செய்ய முயற்சி செய்கிறார்கள். ஆனால் தங்களின் உண்மையான சுயநலன் கிருஷ்ணருக்கு சேவை செய்வதில் உள்ளது என்பதை அவர்கள் அறிவதில்லை.
“விரல்கள் கேக்கை வாயினுள் வைத்தால், எவ்வாறு மொத்த சக்தியானது உடலுக்கும் விநியோகிக்கப்படுகிறதோ. அதுபோல, ஒருவர் கிருஷ்ணரின் நலனுக்காக சேவை செய்தால், எல்லாருடைய நலனும் கவனித்துக்கொள்ளப்படும்.”
குழந்தைப் பருவத்திலிருந்தே பக்தித் தொண்டின் செயல்களில் மனித உடலை உபயோகிக்க வேண்டும்; அதுவே மனிதப் பிறவியின் பக்குவமாகும்.

“சில சமயங்களில், நாம் விஷமாகிவிட்ட உணவை உண்ண நேரிடலாம், அல்லது வேறு ஏதேனும் விஷத்தை அறியாமல் குடித்து விடுவோம். ஆனால் யாரேனும் ஒருவர் விஷத்தை தெரிந்தே எடுத்துக் கொண்டால், அவர் தற்கொலை செய்கிறார் என்று பொருள். அதுபோல, கிருஷ்ண பக்தி இல்லாமல் நமது வாழ்க்கை வீணாகிவிட்டது என்பதை நாம் புரிந்துகொள்ளவில்லை என்றால், வெறுமனே விஷத்தைக் குடிப்பதாக பொருள்.”

மதிப்புடைய மனிதப் பிறவி

மனித வாழ்வில் மட்டுமே நமது உண்மையான சுயநலனைப் பற்றி நம்மால் புரிந்துகொள்ள முடியும். பிரகலாத மஹாராஜர் பின்வருமாறு கூறுகிறார் (ஸ்ரீமத் பாகவதம் 7.6.1):
கௌமார ஆசரேத் ப்ராஜ்ஞோ

தர்மான் பாகவதான் இஹ
துர்லபம் மானுஷம் ஜன்ம
தத் அப்யத்ருவம் அர்ததம்

“போதுமான அறிவுடையோர் வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே—வேறுவிதமாகக் கூறினால், இளம் குழந்தைப் பருவத்திலிருந்தே பக்தித் தொண்டின் செயல்களில் மனித உடலை உபயோகிக்க வேண்டும், இதர ஈடுபாடுகளைக் கைவிடவும் வேண்டும். இந்த மனித உடல் அரிதாக அடையப் பெற்றது. இது மற்ற உடல்களைப் போல தற்காலிகமானதே என்றாலும் அர்த்தமுள்ளதாகும்; ஏனெனில், மனிதப் பிறவியில் பக்தித் தொண்டில் ஈடுபட முடியும். உண்மையான பக்தித் தொண்டு சிறிதளவாயினும்கூட முழுமையான பக்குவத்தை வழங்க இயலும்.”

உடல் அங்கங்கள், உடல் அமைப்பு, மற்றும் மன அமைப்பின்படி பார்த்தால், மனித உடலானது நாயின் உடலைவிட சற்றே வேறுபட்டது. நாயிடம் புலன்கள் உள்ளன, நமக்கும் புலன்கள் உள்ளன; நாயிடம் மனம் உள்ளது, நமக்கும் மனம் உள்ளது; நாயிடம் புத்தி உள்ளது, நமக்கும் புத்தி உள்ளது; நாய் சாப்பிடுகிறது, நாமும் சாப்பிடுகின்றோம்; நாய் தூங்குகிறது, நாமும் தூங்குகின்றோம். அதுபோல, விலங்கின் உடலை வெட்டினால் அதிலிருந்து இரத்தம் வரும், மனிதனின் உடலை வெட்டினாலும் அதிலிருந்தும் இரத்தம் வரும். ஆனால் வேறுபாடு என்னவெனில், விலங்கினால் தனது உண்மையான சுயநலனைப் புரிந்துகொள்ள முடியாது, மனிதனால் அஃது இயலும். உண்மையான சுயநலனின் அடிப்படையில் வாழ்க்கை நடத்தினால், அந்த வாழ்க்கை வெற்றியுடையதாக அமையும். இதுவே மனிதப் பிறவியின் விசேஷ நன்மை. இதனை நாம் வீணாக்கி விடக் கூடாது.
வாழ்வை வீணடிக்க வேண்டாம் கட்டுண்ட ஆத்மாவின் நிலையை ஏற்று, நரோத்தம தாஸ தாகூர் பின்வருமாறு பாடியுள்ளார்:

ஹரி ஹரி! பிபலே ஜனம கோணாய்னு
மனுஷ்ய-ஜனம பாய்யா, ராதா க்ருஷ்ண நா பஜியா,
ஜானியா ஷுனியா பிஷ காய்னு

“பகவான் கிருஷ்ணரே, நான் எனது வாழ்க்கையை வீணடித்து விட்டேன். அரிதான இந்த மனிதப் பிறவியை எடுத்தும் ராதா-கிருஷ்ணருக்கு சேவை செய்யவில்லை என்பதால், நான் தெரிந்தே விஷத்தைக் குடித்துள்ளேன்.” சில சமயங்களில், நாம் விஷமாகிவிட்ட உணவை உண்ண நேரிடலாம், அல்லது வேறு ஏதேனும் விஷத்தை அறியாமல் குடித்து விடுவோம். ஆனால் யாரேனும் ஒருவர் விஷத்தை தெரிந்தே எடுத்துக் கொண்டால், அவர் தற்கொலை செய்கிறார் என்று பொருள். அதுபோல, கிருஷ்ண பக்தி இல்லாமல் நமது வாழ்க்கை வீணாகிவிட்டது என்பதை நாம் புரிந்துகொள்ளவில்லை என்றால், வெறுமனே விஷத்தைக் குடிப்பதாக பொருள். கிருஷ்ண பக்தியில் நாம் ஈடுபடாவிடில், நமது வாழ்க்கை வீணாகிவிடும், பிறவிதோறும் துன்பமயமான சூழ்நிலையில் ஆழ்த்தப்படுவோம். இதுவே இயற்கையின் பாதை. ஜட இயற்கையின் கடுமையான சட்டங்களிலிருந்து நீங்கள் தப்பிக்க முடியாது. கிருஷ்ணர் பகவத் கீதையில் (9.3) பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

அஷ்ரத்ததானா: புருஷா
தர்மஸ்யாஸ்ய பரந்தப

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives