—தமால் கிருஷ்ண கோஸ்வாமி அவர்களின் நினைவுகளிலிருந்து
ஸ்ரீல பிரபுபாதர் ஒருமுறை என்னிடம் லட்டு ஒன்றைக் கொடுத்து, அஃது எப்படி இருக்கிறதென்று கேட்டார். அதன் சுவையை என்னால் யூகித்துப் பார்க்க இயலவில்லை. “இஃது இந்த உலகைச் சார்ந்ததல்ல” என்று கூறினேன்.
அதற்கு பிரபுபாதர் கூறினார், “ஆம், நீ சொல்வது சரிதான், கிருஷ்ணர் மாடு மேய்க்கப் போகும்போது, அன்னை யசோதை அவருக்கு செய்து தரும் இனிப்பு இது. கிருஷ்ணரும் இதனை மிகவும் விரும்பி, நாள் முழுவதும் சாப்பிடுவதற்காக தனது சட்டைப் பை நிறைய எடுத்துக் கொள்வார்.”
ஸ்ரீல பிரபுபாதர் பேசியதிலிருந்து, அஃது அன்னை யசோதையின் பதார்த்தம் என்பதும் அதனை சமைக்கும் வழிமுறையை பிரபுபாதர் நன்கு அறிந்திருந்தார் என்பதும் எனக்குத் தெளிவாகப் புரிந்தது.
ஜய ஸ்ரீல பிரபுபாத!!!
மூலம்: Memories, Anecdotes of a Modern Day Saint, Volume 1