அருளிச் செயலும் அருளாளனும்

Must read

வழங்கியவர்: ஸந்தான கிருஷ்ண தாஸ்

திருக்கோயில்களில் அமைந்திருக்கும் பகவானுடைய திருவிக்ரஹம் அவரது ஒரு குறிப்பிட்ட அவதாரமாகும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது மூல ரூபம், பூரண விரிவம்சங்கள், லீலா அவதாரங்கள், பரமாத்மா என பல வடிவங்களில் பக்தர்களுக்கு எவ்வாறு அருள்பாலிக்கின்றாரோ, அவ்வாறே விக்ரஹ ரூபத்திலும் அருள்பாலிக்கின்றார். பகவானின் இவ்வெல்லா அவதாரங்களையும் வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள், மனு ஸ்மிருதி முதலியவற்றைக் கொண்டு அறியலாம். பகவானுடைய அர்ச்சாவதாரத்தின் (விக்ரஹத்தின்) பெருமைகளை அறிய வேண்டுமெனில், ஆழ்வார்களின் திவ்ய ஸூக்திகளாகிய திவ்ய பிரபந்தங்களை அணுக வேண்டும். ஆகவே, திவ்ய பிரபந்தங்கள் அர்ச்சாவதார வேதம் என்று போற்றப்படுகிறது. இக்கலி யுகத்தில், புராதனமான கோயில்களாகத் திகழும் 108 திவ்யதேசங்கள் குறித்தான பெருமைகளை நம்மால் திவ்ய பிரபந்தங்களில் இருந்தே அறிய முடிகிறது.
ஆழ்வார்கள் திவ்ய சூரிகள் எனப் போற்றப்படுகின்றனர், அவர்கள் பாடிய பாசுரங்கள் திவ்ய பிரபந்தங்கள், அப்பிரபந்தங்களுக்கான பாடுபொருளோ திவ்ய தேசங்கள். இவ்வாறு அனைத்தும் திவ்யமாக அமைந்ததால், “ஆழ்வார் திவ்ய பிரபந்தம் அருளிச் செய்யாதிருந்தால் விஷ்ணு கோயில்களில் நடைபெறும் உற்சவங்கள் பொலிவிழந்து காணப்படுமே!” என்று கம்பர் தமது சடகோபரந்தாதியில் (14) கூறுகிறார்.

பெருமாள் கோயில்

திவ்ய தேசங்கள் நூற்றுக்கு மேற்பட்டதாய் இருப்பினும், கோயில், திருமலை, பெருமாள் கோயில் ஆகியவையே மிக முக்கிய திவ்யதேசங்களாகக் கொண்டாடப்படுகின்றன. ஸ்ரீரங்கம் “கோயில்” என்றும், திருவேங்கடமலை “திருமலை” என்றும், ஸ்ரீகாஞ்சி “பெருமாள் கோயில்” என்றும் பக்தர்களால் கொண்டாடப்படுகின்றன.

நம்மாழ்வார் தம்முடைய முதற் பிரபந்தமான திருவிருத்தத்தில் (28, 60, 26) இம்மூன்று திவ்ய தேசங்களை மட்டுமே மங்களாசாஸனம் செய்துள்ளார் என்பதை வைத்து, எல்லா திவ்ய தேசங்களுள் இம்மூன்று இடங்கள் ஏற்றம் பெற்று விளங்குவதாக பிரபந்தம் அறிந்த பெரியோர் கூறுவர். இம்மூன்று திவ்யதேசங்களுக்கு ஆழ்வார் திருவுள்ளத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக ஸ்ரீ வைஷ்ணவப் பெருந்தகையாளர்கள் கருதுகின்றனர். ஸ்வாமி நம்மாழ்வார் இல்லாமல் வரதனைக் குறிப்பிடவோ வரதன் இல்லாமல் ஸ்வாமி நம்மாழ்வாரை குறிப்பிடவோ இயலாது. இவ்வாறு விளக்கின் ஒளிபோல, சர்க்கரையின் சுவைபோல, வார்த்தைகளின் அர்த்தம்போல இவ்விருவரும் பிரியாமல் இருக்கின்றனர்.

ஸ்ரீ காஞ்சியின் முக்கியத்துவத்திற்கு ஆழ்வாருடைய ஸ்ரீ ஸூக்தியே காரணமாகத் திகழ்கிறது. நம்மாழ்வார் முதல் பிரபந்தத்தின் முதல் பாட்டிலும் இறுதி பிரபந்தமான திருவாய்மொழியின் முதல் பாட்டிலும் தேவப்பெருமாளையே போற்றியுள்ளார். திருவிருத்தத்தின் முதல் பாட்டில் பின்வருமாறு கூறுகிறார்:

பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா வொழுக்கும் அழுக்குடம்பும்,

இந்நின்ற நீர்மை இனியா முறாமை, உயிரளிப்பான்

எந்நின்ற யோனியு மாய்ப்பிறந் தாயிமை யோர்தலைவா!

மெய்ந்நின்று கேட்டரு ளாய்,அடி யேன்செய்யும் விண்ணப்பமே.

“எல்லா உயிர்வாழிகளையும் காத்தருள்வதற்காக, பல்வேறு வகையான பிறவிகளில் அவதரித்தவனே! தேவர்களுக்குத் தலைவனே! பொய்ம்மை நிலைபெற்ற அறிவோடும் தீய ஒழுக்கத்துடனும் தூய்மையற்ற உடலுக்கான இயல்பை (பிறவித் துன்பத்தை) இனியும் நாங்கள் அடையாதவண்ணம் உனது அடியவனாகிய நான் உரைக்கும் உண்மையான விண்ணப்பத்தை நின்று நீ கேட்டருளாயோ.”

தேவாதிராஜன் என்னும் திருநாமத்தை “இமையோர் தலைவா!” என்று அருளிச் செய்ததைக் காணலாம். மேலும், திருவாய்மொழியின் முதற்பாட்டில், “அமரர்களதிபதி” என்று ஆழ்வார் கூறியிருப்பதும் தேவப் பெருமாளை திருவுள்ளத்தில் கொண்டே பாடியுள்ளார் என்பதை அறியலாம். மேலும், ப்ரணதார்த்தி ஹரன் என்ற திருநாமத்தை “துயரறு சுடரடி” என்று அருளிச் செய்ததையும் நாம் காணலாம்.

எல்லா திவ்ய தேசங்களும் பெருமாள் கோயிலாகவே இருப்பினும், இதனை மட்டும் “பெருமாள் கோயில்” என்று விசேஷமாக அழைப்பது மரபாக உள்ளது. இதுவும் இத்தலத்திற்கு உயர்வளிப்பதாக உள்ளது.

இத்தலத்து எம்பெருமாளுக்கு தேவராஜன், தேவாதிராஜன் முதலான மேன்மை பொருந்திய எண்ணற்ற திருநாமங்கள் இருப்பினும், அருளாளன், பேரருளாளன் போன்ற திருநாமங்களே உள்ளத்தை உருக்குபவையாக திகழ்கின்றன என பெரியோர்கள் கூறுகின்றனர். “திவ்ய பிரபந்தம்” என்கிற திருநாமத்துடன் போற்றப்பட்ட ஆழ்வார்களின் ஸ்ரீஸூக்திகள், பூர்வாசாரியர்களின் காலத்தில் “அருளிச் செயல்” என்று கொண்டாடப்பட்டது.

அருளாளனின் அருளிச் செயல் ஈடுபாடு

காஞ்சி வரதராஜப் பெருமாளின் வைகாசி பிரம்மோற்சவத்தில் கருட சேவை மிகவும் பிரசித்தம். அதாவது வேத ஸ்வரூபமான கருட பகவானின் மேல் பெருமாள் அமர்ந்து தானே பரம்பொருள் என்பதை உலகறியச் செய்யும் விதமாக எழுந்தருள்வது. இதுவும் ஸ்வாமி நம்மாழ்வாருக்காகவே நிகழ்கிறது. ஏனெனில், அவர் தமது திருவாய்மொழியில் (1.4.6) பாடுகிறார்:

பேரருளாளன் அருளிச் செயல் கோஷ்டியருக்கு அருளியுள்ள ஏற்றம்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரத் திருநாளான ஸ்ரீ ஜெயந்திக்கு மறுநாள் கண்ணன் திருவீதிப் புறப்பாட்டில் இயல்கோஷ்டி தொடங்கும்போது எண்ணெய்க் காப்பு விநியோகிக்கப்படுவது அருளிச்செயல் கோஷ்டியருக்கு வழங்கப்படும் சிறப்புகளுள் ஒன்று.

ஆன்மீக உலகிலுள்ள பரம புருஷரின் விரிவாம்சங்கள் பகவத் தொண்டில் ஒருவனுக்குள்ள ஈடுபாட்டிற்கேற்ப இந்த ஜட உலகில்கூட உணர்ந்து அறியப்படுகின்றனர். பக்தித் தொண்டின் மிகத் தாழ்ந்த நிலையிலுள்ள ஆரம்ப சாதகன்கூட தனது செயல்களையெல்லாம் பகவானின் திருப்திக்காக அர்ப்பணித்து, கோயில்களில் தனது கிருஷ்ண வழிபாட்டை விருத்தி செய்துகொள்ள வேண்டும். எனவே, இவ்வாறான கோயில்களில் வீற்றிருக்கும் அர்ச்சா விக்ரஹங்களை தரிசித்து அவரது திருவடிகளில் சரண்புகுந்து பக்தர்களுடன் கூடிக்குளிர முயற்சிப்போம் வாரீர்.

இக்கட்டுரையின் பல கருத்துகள் ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதியஅருளிச் செயலும் அருளாளனும்எனும் கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.

பிரபந்த பித்தன்

பொதுவாக திவ்ய தேசங்களில் காலை திருவாராதனத்தில் பெருமாள் திருப்பாவை திருச்செவி சாத்தியருளுவது வழக்கம். ஆயினும், காஞ்சியின் தேவப் பெருமாளோ அருளிச் செயல் முழுவதையும் படிப்படியாக செவியுற்று சாத்தியருளுகிறார். ஒவ்வொரு நாளும் திருவாராதனத்தில் ஐம்பது ஐம்பது பாசுரங்கள் பாடப்படுகின்றன. இவ்வாறாக, வருடத்தில் நான்கைந்து முறை திவ்ய பிரபந்தம் முழுவதும் நிறைவு பெறுகிறது.

மேலும், ஸ்ரீ வரதராஜப் பெருமாள் வீதி புறப்பாட்டின்போது தமக்கு முன்பே தமிழ் வேதமான ஆழ்வார்களின் திவ்ய பிரபந்தங்களை கோஷ்டியாகப் பாடும்படியும், சமஸ்கிருத வேதங்களைத் தமக்கு பின்னே பாடிக் கொண்டு வரும்படியும் அமைத்துள்ளார். இஃது அவர் ஒரு பிரபந்த பித்தன் என்பதை நமக்கெல்லாம் பறை சாற்றுகின்றது. ஆழ்வார்களின் ஏற்றத்தினை உலகறியச் செய்ய இன்றளவும் அவர்களது வருட திருநட்சத்திரங்களின்போது தாமே அந்தந்த ஆழ்வார்களின் சந்நிதிகளுக்கு எழுந்தருளி அவர்களின் பிரபந்தங்களைக் கேட்டு ஆனந்தித்து அவர்களுக்கு தனது பரிவட்ட மாலை மரியாதைகளை அளித்து இன்புறுகிறார்

கருட வாகனத்தில் வரதராஜர் பவனி வருதல்

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives