AUTHOR NAME

Jivana Gaurahari Dasa

39 POSTS
0 COMMENTS
திரு. ஜீவன கௌர ஹரி தாஸ் அவர்கள், சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த வண்ணம் கிருஷ்ண பக்தியை பயிற்சி செய்து வருகிறார்.

இராமானுஜர் காட்டிய வைஷ்ணவ சேவை

வைணவ தர்மத்தைப் பரப்பிய ஆச்சாரியர்களில் மிகவும் முக்கியமானவராக விளங்கியவர் இராமானுஜர். ஆதிசேஷனின் அவதாரமான இவர் கலி யுகத்தில் 1017ஆம் ஆண்டு ஸ்ரீ பெரும்புதூரில் கேசவ சோமயாஜிக்கும் காந்திமதிக்கும் தெய்வீக மகனாகத் தோன்றினார். இராமானுஜரின் தோற்றம், செயல்கள், உபதேசம், மறைவு என அனைத்துமே திவ்யமான லீலைகளாகும். ஸ்ரீ ஸம்பிரதாயம் எனப்படும் இராமானுஜ பரம்பரையில் பகவத் கைங்கரியத்தோடு இணைந்து வைஷ்ணவ கைங்கரியத்திற்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஒரு பக்தன் தனது ஆச்சாரியருக்கும் சக வைஷ்ணவர்களுக்கும் சேவை செய்வதில் மிகுந்த முனைப்புடன் இருக்க வேண்டும். அத்தகு மனப்பான்மையினை இராமானுஜரின் வாழ்விலும் அவரைச் சார்ந்த இதர பக்தர்களின் வாழ்விலிருந்தும் சில உதாரணங்களை வைத்து அறிவோமாக.

வெங்காயம், பூண்டை ஏன் தவிர்க்க வேண்டும்?

வெங்காயம், பூண்டில் மனிதர்களை மெல்லக் கொல்லும் விஷத்தன்மை கொண்ட 21 பொருட்கள் இருப்பதாக சில விஞ்ஞான ஆராய்ச்சிகள் கூறுகின்றன. (உதாரணம்: டாக்டர். ரோபர்ட் சி பெக், அமெரிக்கா அவர்களின் ஆராய்ச்சி) மேலும், மனிதனின் மூளை வளர்ச்சிக்கு இவை தடையாக இருப்பதாகவும் கூறுகின்றனர். வேறு சில விஞ்ஞானிகள் வெங்காயம், பூண்டினை நன்மையானவை என்றும் கூறலாம், அபிப்பிராய பேதங்கள் விஞ்ஞானிகளுக்கு மத்தியில் இருப்பது ஆச்சரியமல்ல. பக்தர்கள் வேத சாஸ்திரங்களையும் ஆச்சாரியர் களின் வார்த்தைகளையும் ஏற்று வெங்காயம், பூண்டினைத் தவிர்க்கின்றனர்.

மனம் ஒரு குரங்கு

பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மனதை அடக்குவதற்கு அர்ஜுனனிடம் யோகப் பயிற்சியை பரிந்துரைத்தார். அதற்கு அர்ஜுனனோ, “கிருஷ்ணா, மனம் அமைதியற்றதும், குழப்பம் நிறைந்ததும், அடங்காததும், சக்தி மிகுந்ததுமாயிற்றே, வீசும் காற்றை அடக்குவதை விட மனதை அடக்குவது கடினமானதாக எனக்குத் தோன்றுகிறது.” என்று கூறினான் (பகவத் கீதை 6.34). பௌதிக உலகில் மனம் பொதுவாக மனைவி, கணவன், குழந்தைகள் என உடல் சம்பந்தமான உறவுகளில் மூழ்கியிருக்கிறது. மனமானது பொதுவாக தன் வட்டத்திற்கு உட்பட்ட பொருட்கள்மீது மிகுந்த பற்றுதலை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது.

குருக்ஷேத்திரம் – பகவத் கீதை பிறந்த பூமி

வழங்கியவர்: ஜீவன கௌரஹரி தாஸ் இந்திய தலைநகரான டெல்லியிலிருந்து 150 கி.மீ. தொலைவில் வடக்கு திசையில் ஹரியானா மாநிலத்தில் அமைந்திருப்பதே குருக்ஷேத்திரம் என்னும் திருத்தலம். பகவத் கீதையின் பிறப்பிடமாகப் போற்றப்படும் குருக்ஷேத்திரத்தில், பகவான் ஸ்ரீ...

தேவர்களை வழிபடலாமா?

கோயில் இல்லாத ஊர்களில் குடியிருக்க வேண்டாம் என்பர். தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தெய்வீக வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றது. பக்திக்கு பெயர் போன திராவிட தேசத்தில் இன்றும் ஏராளமான வழிப்பாட்டு தலங்கள், கோயில்கள், குளங்கள் காணப்படுகின்றன, இறைவனை வழிபடும் கலாச்சாரம் தமிழ் மக்களின் ரத்தத்தில் ஊறிப்போன விஷயமாகும். அதே சமயத்தில் தற்போதைய காலக்கட்டத்தில் இந்தியாவிலேயே மனிதர்கள் மனிதர்களையே வழிபடும் அவலநிலை கலாச்சாரம் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் பெருகியுள்ளது என்றால் அது நிச்சயம் மிகையல்ல.

Latest