தெய்வீக ரிஷியான நாரதர் யார் என்பதையும் அவரது பெருமைகள் யாவை என்பதையும் தெரிந்து கொள்ளாமல், மக்கள் அறியாமையில் இருப்பதே இத்தகைய மூடத்தனத்திற்கு வழிவகுக்கின்றது. அதனால், அவரைப் பற்றி அறிந்துகொள்ளுதல் எல்லா குழப்பங்களையும் மக்கள் மனதிலிருந்து விலக்கும் என்னும் நோக்கத்துடன், இக்கட்டுரை வாசகர்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது
டார்வினின் பரிணாமக் கொள்கை உயிர்களின் வாழ்விற்கு இயற்கையை மட்டும் காரணமாகக் காட்டுகிறது. இதனைக் கட்டுப்படுத்துபவர் யாருமில்லை என்றும், உயிர்களின் பரிணாமம் தானாக நிகழ்ந்தது என்றும் கூறியதன் மூலமாக, டார்வின் கொள்கை உலக அளவில் நாத்திகம் வளர்வதற்கு அடிப்படையாக அமைந்தது. மேலும், மக்களிடையே படிப்படியாக நற்பண்புகள் குறைந்து, புலனின்ப வேட்கையும் லௌகீகவாதமும் அதிகரிப்பதற்கு டார்வின் கொள்கை அடிப்படையாக உள்ளது.
கர்ம யோகத்தை நிறைவேற்றுவதற்கு, கடமை என்றால் என்ன என்பதை ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளுதல் அவசியம். இவ்வுலகில் பெரும்பாலான மக்கள் கடமைகுறித்து தத்தமது சொந்த அபிப்பிராயங்களைக் கொண்டுள்ளனர். உதாரணமாக, கசாப்புக் கடை வைத்திருப்பவன்கூட, மிருகங்களை வெட்டுவது தன்னுடைய கடமை என்றும் அதன் மூலமாகவே தான் முக்தியடையலாம் என்றும் ஏமாற்றப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளான்.
பசுக் கொலையை ஆதரிப்பவர்களின் மற்றொரு வாதம், பசுக்களுக்கு ஆத்மா இருப்பதை நம்பாத இதர மதத்தினரின் சுதந்திரத்தை பசு வதை தடுப்புச் சட்டம் மறுக்கின்றது என்பதாகும். உண்மையில் இவ்வாறு பசுக் கொலையை ஆதரிப்பவர்கள், எந்த மதத்தையும் பின்பற்றாமல், மிருகங்களைப் போல வாழும் நாத்திகர்களாவர்.
எனக்குப் பிடித்த நாயகன் என்று ஒவ்வொரு ரசிகனும் யாரேனும் ஒருவரை நம்பியிருந்தான், ஆனால் தனது நாயகனின் தோல்வியினால் நம்பிக்கை இழந்தான். இந்திய அணியினை தோல்வியிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று இறைவனை வேண்டி, வேலூரில் ஓர் இளைஞன் தனது நாவினை வெட்டிக் கொண்ட கொடூரமும் நிகழ்ந்தது. சிலர் யாகங்கள் நடத்தினர், சிலர் சிறப்பு வழிபாடுகளைச் செய்தனர்; ஆனால் தோல்வியே அவர்களைத் தழுவியது.