சைதன்ய மஹாபிரபுவின் முக்கியமான உபதேசம், அனைவரும் கிருஷ்ண உணர்வை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்பதும், ஹரியின் நாமத்தில் அனைத்து மங்களங்களும் அடங்கி உள்ளது என்பதுமாகும். சைதன்ய மஹா பிரபுவின் போதனைகளை உலக மக்களுக்கு பாகுபாடின்றி எடுத்துரைத்தவர் தெய்வத்திரு. அ.ச. பக்திவேதாந்த சுவாமி ஸ்ரீல பிரபுபாதர். தனது திருநாமம் உலகின் ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் பரவும் என்று சைதன்ய மஹாபிரபு முன்னரே கூறியிருந்தார்; அக்கூற்றினை ஸ்ரீல பிரபுபாதர் நிறைவேற்றினார்.
பாரதம் பல்வேறு வசதிகளுடனும் விஞ்ஞான ஆற்றலுடனும் வாழ்ந்து வந்த நாடாகும். அதனால்தான் முகலாயர்களும் ஐரோப்பியர்களும் இந்தியாவின் மீது படையெடுத்தனர், இந்தியாவின் சொத்துக்களை சூறையாடினர். அவ்வாறு இருப்பினும், ஆங்கிலேயர்கள் இந்தியர்களிடம், இந்தியர்கள் விஞ்ஞான அறிவுடையவர்கள் அல்ல, "இந்திய பாரம்பரியமும் பண்பாடும் பழமைவாதம்," போன்ற கருத்துகளை ஆழமாக பரப்பியுள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் இரண்டாம் நாளன்று, பகவத் கீதை பேசப்பட்டதன் 5,151வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் ஒன்றில், இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சரான திருமதி. சுஷ்மா சுவராஜ் அவர்கள், பகவத் கீதையில் அனைவரின் வாழ்வின் எல்லா பிரச்சனைகளுக்கும் உரிய பதில் உள்ளது என்றும், இதனை பிரதமர் மோடி பாரதத்தின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
புராணங்களும் இதிகாசங்களும் உண்மையில் நிகழ்ந்த சரித்திரங்கள், இந்த சரித்திரங்கள் கடவுளின் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும் அவரது பக்தர்களின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களையும் எழுத்து வடிவில் நமக்கு படம் பிடித்துக் காண்பிக்கின்றன. இதில் தங்களது சொந்த கற்பனைகளை சொருகுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை.
மிகவும் சிக்கலான தர்மத்தின் நெறிமுறைகளை மக்கள் புரிந்துகொள்ள உதவும் இதிகாசமே மஹாபாரதம். ஆயினும், தர்மத்தின் கொள்கைகளை அதர்மத்தில் ஊறித் திளைத்து நிற்கும் மக்களால் புரிந்துகொள்ள முடியாத காரணத்தினால், மஹாபாரதத்தின் சில பகுதிகள் பொதுமக்களுக்கு புரிவதில்லை. தர்மத்தினை எடுத்துரைக்கும் நூலில் அதர்மம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக நினைக்கின்றனர். அதற்காக அவர்கள் சுட்டிக் காட்டும் உதாரணங்களில் ஒன்று: பீமன் துரியோதனனை தொடையில் அடித்து வதம் செய்த நிகழ்ச்சியாகும். பீமனின் அந்த செயலை எவ்வாறு புரிந்துகொள்வது என்பதை சற்று விரிவாகக் காண்போம்.