AUTHOR NAME

Sri Giridhari Das

117 POSTS
0 COMMENTS
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

ஸ்ரீ சைதன்யரை அறிதல்

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு என்பவர் யார்? இவரை பெரும்பாலானோர் உயர்ந்த பக்தராகவும் ஒரு சந்நியாசியாகவும் காண்கின்றனர். ஆனால் இவரை நெருக்கமாக அறிந்த உயர்ந்த பக்தர்களோ, சாக்ஷாத் முழுமுதற் கடவுள் கிருஷ்ணராக இவரை அறிகின்றனர். அதுமட்டுமின்றி, ஸ்ரீமதி ராதாராணியின் மனோபாவத்துடன் பக்த ரூபத்தில் தோன்றியவராகவும் அறிகின்றனர். சிலர் இதில் ஐயம் கொள்கின்றனர், ஏற்க மறுக்கின்றனர், பல்வேறு வினாக்களை எழுப்புகின்றனர். அவர்களுக்கான பதிலே இக்கட்டுரை.

நதி நீர் மேம்பாடு, என்ன செய்யலாம்?

தமிழகத்தில் பாய்ந்தோடிய ஆறுகளின் எண்ணிக்கையை அறிந்தால், பலருக்கும் தலையைச் சுற்றும். முக்கிய ஆறுகள் மட்டுமே 102 இருந்தன, அவற்றின் கிளை நதிகளும் பிரிவுகளும் எண்ணற்றவை, இன்று அவை வெறும் போக்கிடமாக இருக்கின்றன. காவிரி, பாலாறு, வைகை, நொய்யல், மோயாறு, பவானி, தாமிரபரணி ஆகிய ஏழு ஆறுகளும் நீண்ட தூரம் பயணிக்கும் பெரிய ஆறுகளாக இருந்துள்ளன. இந்த பெரிய ஆறுகளில் தாமிரபரணி தவிர மற்றவை அனைத்தும் வறண்டு விட்டன, இதர 95 ஆறுகளைப் பற்றி கூற வேண்டிய தேவையே இல்லை.

ஆண்டாளே, மன்னித்து விடு

ஆண்டாளைப் பற்றிய தரமற்ற விமர்சனம் நெஞ்சில் ஈட்டி பாய்ந்ததைப் போல இருந்ததால், கண்டனம் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். அதுவும் ஆண்டாளைப் புகழ்வதற்கென்று அமைக்கப்பட்ட மேடையில் ஆண்டாளின் சிறப்புமிக்க மார்கழி மாதத்தில், இச்செயல் நிகழ்ந்தது வருத்தமளிக்கிறது, வேதனையளிக்கிறது. கடுமையாகக் கண்டிக்கின்றோம், பேசியவனின் சொற்களில் உள்ள அடிப்படைப் பிழைகளையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

சமூக வலைத்தளங்கள் ஆன்மீகத்தை அறிய உதவுமா?

உலகம் வானொலியால் சுருங்கியது, தொலைக்காட்சியால் சுருங்கியது, இணையத்தால் மேலும் சுருங்கியது; இன்றோ சமூக வலைத்தளங்களால் மேன்மேலும் சுருங்கியுள்ளது. பத்திரிகை, தொலைக்காட்சி முதலிய பெரியபெரிய ஊடகங்களைக் காட்டிலும், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் முதலிய சமூக ஊடகங்கள் இன்று மக்களை ஆக்கிரமித்துள்ளன. இவற்றில் இல்லாதவர்களை இன்றைய உலகம் வினோதமாகக் காண்கிறது. ஆன்மீகத்தை அறிய ஆவல் கொண்டுள்ள நபர்களும்கூட, இவற்றின் மூலமாக ஆன்மீக விஷயங்களைப் பெற விரும்புகின்றனர். எந்த அளவிற்கு அது சாத்தியம் என்பதை விவாதிக்கலாம்.

வண்ணானைக் கொன்ற கண்ணன்

மதுராவினுள் நுழைந்த கிருஷ்ணர், தமது வழியில் சில நயமான துணிகளை வைத்திருந்த வண்ணானைச் சந்தித்தார், தமக்கும் பலராமருக்கும் அற்புதமான ஆடைகள் சிலவற்றை

Latest