AUTHOR NAME

A.C Bhaktivedanta Swami Prabhupada

226 POSTS
0 COMMENTS
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

உண்மையான யோகத்தின் இரகசியங்கள்

எங்கெல்லாம் தர்மத்திற்குத் தொல்லைகள் ஏற்பட்டு (யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத) அதர்மம் ஆதிக்கம் செலுத்துகின்றதோ (அப்யுத்தானம் அதர்மஸ்ய), அப்போதெல்லாம் நான் (கிருஷ்ணர்) தோன்றுகிறேன் (ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்) (பகவத் கீதை 4.7). பௌதிக உலகிலும் இதே கோட்பாடு செயல்படுவதைக் காணலாம். அரசாங்கத்தின் சட்டங்கள் மீறப்படும்போது நிலைமையைச் சரி செய்ய எந்தவொரு குறிப்பிட்ட அரசு அதிகாரியோ போலீஸாரோ அந்த இடத்திற்கு வருகிறார்.

பரவசத்தை மறுத்த பிரபுபாதர்

ஸ்ரீல பிரபுபாதர் சில நேரங்களில் தமது உபன்யாசத்தின்போது பரவசத்தில் மூழ்கி விடுவார். ஒருமுறை சான்பிரான்சிஸ்கோவில் கிருஷ்ணரின் பிரிவில் இருந்த ஸ்ரீ சைதன்யரின் பாவத்தை எடுத்துரைத்தபோது அவ்வாறு நிகழ்ந்தது. இந்தியாவின் கோரக்புரிலும் ராதா-மாதவ விக்ரஹங்களுக்கு முன்பாக அமர்ந்து கிருஷ்ண லீலைகளை விவரிக்கையில் நிகழ்ந்தது, மீண்டும் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உபன்யாசத்தின்போது நிகழ்ந்தது. அத்தருணங்களில், அவரது உணர்வில் ஒரு தெளிவான மாற்றம் காணப்பட்டது.

மலிவான உடல்கள் தேவையில்லை!

மலிவான பொருளை வாங்கி விட்டு, அது வீணாகி, மீண்டும்மீண்டும் அதையே வாங்குதல் சரியல்ல; அதுபோல, மலிவான பௌதிக உடலை மீண்டும்மீண்டும் பெறுதல் சரியல்ல என்றும், தரமான ஆன்மீக உடலைப் பெற வேண்டும் என்றும் ஸ்ரீல பிரபுபாதர் அறிவுறுத்துகிறார். விருந்தினர்: ஆத்மா எப்போதும் ஓர் உடலிலிருந்து மற்றோர் உடலுக்கு மாறுகிறது என்றால், அஃது எவ்வாறு முக்தி பெறுகின்றது?

துயருற்றவர்களின் மீது பக்தர்களின் கருணை

பரீக்ஷித் மஹாராஜர் நரக லோகங்களைப் பற்றிய விவரங்களை சுகதேவ கோஸ்வாமியிடமிருந்து கேட்டறிந்தவுடன், மக்களை அதிலிருந்து எவ்வாறு விடுவிப்பது என்று வினவினார். அவர் ஒரு வைஷ்ணவர் (பக்தர்). வைஷ்ணவன் எப்போதும் பிறரின் துன்பத்திற்காக வருந்துபவன், பிறரின் துயரங்கள் அவனை மிகவும் வாட்டும். எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாயினும் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களாயினும், எல்லா வைஷ்ணவர்களும் அதாவது பக்தர்கள் அனைவரும் கடவுள் உணர்வுள்ளவர்கள், கருணையுள்ளம் படைத்தவர்கள் ஆவர்.

தபால் பெட்டியில் தபால் போடுவதைப் பார்த்து…

புரோக்லின் நகரின் கிழக்கு நதிக்கரையில் காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்ட பின்னர், ஸ்ரீல பிரபுபாதரும் நானும் ஹென்றி தெருவில் உள்ள நமது கோயிலுக்கு காரில் திரும்பினோம். கோயிலுக்குள் நுழைவதற்கு சற்று முன்பாக, வீதியின் ஓரத்தில் ஒரு காட்சியைக் கண்டோம். அங்கே சிறுவன் ஒருவன் தபால் பெட்டியில் தபால் போட முயன்றான், அவனுடன் வந்திருந்தவர் அவனைத் தூக்கி அவனுக்கு உதவினார். அக்காட்சி ஐந்து அல்லது பத்து நொடிகள் மட்டுமே இருந்திருக்கும். ஆயினும், காரில் இருந்தபடி அதைக் கண்ட பிரபுபாதர் அக்காட்சியில் ஆழ்ந்தார். அவரது கண்கள் பெரிதாகி, பிரகாசமாயின, அவரது கவனத்தில் அக்காட்சி மட்டுமே இருந்தது.

Latest