எது தீர்த்த ஸ்தலம்? வைகுண்டத்தில் நித்தியமாக வசிக்கும் பகவான் நாராயணரோ அவரது தூய பக்தர்களோ இம்மண்ணுலகில் தோன்றி லீலைகள் புரிந்த இடங்கள் புனிதமான தீர்த்த ஸ்தலங்களாக அறியப்படுகின்றன. இந்த தீர்த்த ஸ்தலங்கள் வைகுண்ட லோகங்களிலிருந்து வேறுபாடற்றவையாக உள்ளதால் அளவிட இயலாத தெய்வீக சக்திகளால் நிறைந்துள்ளன. பகவான் கிருஷ்ணர் எங்கும் நீக்கமற நிறைந்திருந்தாலும், தீர்த்த ஸ்தலங்களில் அவரை அணுகுதல் மிகவும் எளிது. தீர்த்த ஸ்தலங்களில் ஒருவர் செய்யும் பக்தி சேவை பல மடங்கு பலனைத் தரும் என்பது சாஸ்திரங்களின் கூற்று. எனவே, ஆன்மீக வாழ்வில் துரிதமாக முன்னேற விரும்புவோரின் அடைக்கலமாக தீர்த்த ஸ்தலங்கள் திகழ்கின்றன.
நினைவிற்கெட்டாத காலம் தொட்டு எல்லா உயிர்வாழிகளும் இந்த பௌதிக உலகில் துன்புற்று வருகின்றனர். ஜட உலகினை அனுபவிக்க வேண்டும் என்ற உயிர்வாழியின் எண்ணமே இத்தகு துன்பத்திற்கான மூல காரணமாகும். ஜட உலகின் தொடர்பினால் ஜட இயற்கையின் முக்குணங்களான ஸத்வ, ரஜோ மற்றும் தமோ குணங்களின் தாக்கத்திற்கு ஜீவன் உட்படுகிறான். ஆனால், உண்மையில் பரம புருஷரைப் போன்று ஜீவன்களும் ஆனந்தமயமானவர்களே. ஜீவன்கள் தற்போதைய கட்டுண்ட நிலையில் தங்களது ஸ்வரூபத்தினை (நான் பரம புருஷ பகவானின் சேவகன் என்பதை) மறந்துள்ளனர். பக்தித் தொண்டின் மூலமாக அந்த ஸ்வரூப நிலையினை மீண்டும் அடையலாம்.
ஜகதீஸ கோஸ்வாமி மற்றும் ஷததண்ய ஸ்வாமியின் பேட்டியிலிருந்து
மதுத்வீஸ தாஸர் மும்பை இஸ்கானின் தலைவராக இருந்தார். ஆயினும், இந்தியர்களுடன் இணைந்து சேவை புரிவதில் அவர் தமக்கிருந்த அதிருப்தியை பிரபுபாதரிடம் தெரிவித்தார், தமக்கு வேறொரு பிரச்சாரத்...
பன்னெடும் காலத்திற்கு முன்னர், சரஸ்வதி நதிக்கரையில் குழுமிய முனிவர்கள், மும்மூர்த்திகளாக அறியப்படும் பிரம்மா, விஷ்ணு, சிவனில் யார் சிறந்தவர் என்று விவாதித்தனர்.