AUTHOR NAME

wadminw

185 POSTS
0 COMMENTS

ஸ்ரீ சைதன்யரின் இறுதி வருடங்கள்

தமது அவதாரத்தின் இறுதி பதினெட்டு வருடங்களில் பகவான் சைதன்யர் புரியை விட்டு எங்கும் செல்லவில்லை. அச்சமயத்தில் கிருஷ்ணரின் பிரிவினால் எழக்கூடிய கசப்பும் இனிப்பும் கலந்த பரவசத்தில் மேன்மேலும் மூழ்கியபடி இருந்தார். பகலில் பல்வேறு செயல்கள் அவரது மனதை ஓரளவிற்கு திசை திருப்பும், ஆனால் இரவில் கிருஷ்ணரின் பிரிவு அவருக்கு சொல்லவியலா பெருந்துன்பத்தைக் கொடுக்கும். அத்துன்பம் கிருஷ்ணர் விருந்தாவனத்தை விட்டு மதுராவிற்குச் சென்றதால் ராதாராணி அனுபவித்ததைப் போன்றதாகும்.

புலனின்பத்திற்கான இசை

1966ல் நியூயார்க் நகரில், இளைஞன் ஒருவன் இந்தியாவின் புகழ்பெற்ற இசையான சிதார் இசை அடங்கிய ஓர் இசைத்தட்டை எடுத்து வந்தான். அதனை இசைக்கத் தொடங்கியவுடனே ஸ்ரீல பிரபுபாதர் புன்னகைத்தார். அந்த இளைஞன், “இந்த இசை உங்களுக்குப் பிடிக்குமா?” என்றான். அதற்கு ஸ்ரீல பிரபுபாதர், “இது புலனின்பத்திற்கான இசை” என்றார்.

கிருஷ்ணர் கோவர்தன மலையை உயர்த்துதல்

அப்பா, நாம் மழைக்காக இந்திரனை வழிபட வேண்டியதி ல்லை. கடல் இந்திரனை வழிபடுவதில்லை, ஆயினும் அங்கும் மழை பொழிகிறது. அதனால், நம் மாடுகளுக்கு புல்லும் நமக்கு பலவிதமான பழங்களையும் வழங்கும் கோவர்தன மலையை நாம் வழிபடலாமே. சரி அவ்வாறே செய்யலாம். நந்த மஹாராஐர் ஒப்புக் கொண்டார்

ஸ்ரீ கிருஷ்ணரின் பிறப்பு

சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு, கம்சன் என்ற அசுரன் மதுராவை ஆண்டு வந்தான். அவன் தனது தங்கை தேவகியை சூரசேனரின் மகனான வசுதேவருக்கு மணமுடித்தான், மணமக்களை ரதத்தில் ஏற்றி தானே அதனை ஓட்டிச் சென்றான்

மொட்டைத் தலையும் வெறும் காலும்

ஒரு மாலை வேளையில், இலண்டனில் உள்ள பக்திவேதாந்த பண்ணையில், ஸ்ரீல பிரபுபாதர் சீடர்கள் சிலருடனும் விருந்தினர்களுடனும் தமது அறையில் அமர்ந்திருந்தார். ஸ்ரீல பிரபுபாதரை பேட்டி காண வந்த ஒரு பெண் நிருபரும் அங்கே இருந்தார். மிதமான கோடைகாலமாக இருந்தபோதிலும், அந்த பெண் நிருபர் குட்டைப் பாவாடையே அணிந்திருந்தார். ஹரே கிருஷ்ண இயக்கத்தைப் பற்றி அவள் எழுப்பிய சில வினாக்களிலிருந்து, அவளுடைய சந்தேகமும் குறை காணும் மனோபாவமும் வெளிப்பட்டன.

Latest