சேலம் மாநகருக்கு அருகே எழில் சூழ்ந்த கல்வராயன் மலையில், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு பக்த சமுதாயம் தற்போது வளர்ந்து வருகிறது. பஞ்சவடி பண்ணை” என்ற பெயரில் அழைக்கப்படும் இவ்விடத்தில் வருடம் முழுவதும் (குறிப்பாக கோடையில்) நிலவும் இனிய தட்பவெப்பம் இங்கு வசிப்பவர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் தமிழ்நாட்டின் வெப்பத்திலிருந்து விடுதலையளிக்கிறது.
தவத்திரு பக்தி விரஜேந்திர நந்தன ஸ்வாமி அவர்கள் மலேசியாவில் 1938ஆம் ஆண்டில் பிறந்தார். உயர்கல்விக்காக இங்கிலாந்து சென்றிருந்த காலத்தில், இஸ்கான் பக்தர்களுடன் தொடர்பு ஏற்பட்டு 1971ஆம் ஆண்டில் பர்மிங்ஹம் கோயிலில் பிரம்மசாரியாக இணைந்தார். அதன் பிறகு, 1972இல் இலண்டனின் பரி ப்லேஸ் என்ற இடத்தில் அமைந்திருந்த கோயிலுக்கு மாறி அங்கே பல்வேறு சேவைகளில் ஈடுபட்டார். கடின சேவைகளை எளிதில் நிறைவேற்றும் பக்குவமான பிரம்மசாரியாக அவர் திகழ்ந்தார். 1972ஆம் ஆண்டின் ஜுலை மாதத்தில் இஸ்கானின் ஸ்தாபக ஆச்சாரியர் தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரிடமிருந்து தீக்ஷை பெற்றார். ஸ்ரீல பிரபுபாதர் இவருக்கு விரஜேந்திர குமார தாஸ் என்று பெயரிட்டார்.
முன்னொரு காலத்தில் உத்தானபாதர் என்ற மன்னர் ஒருவர் இருந்தார். அவருக்கு சுனிதி, சுருசி என்று இரண்டு மனைவிகள், அவர்களுக்கு முறையே துருவன், உத்தமன் என்று இரண்டு மகன்கள் இருந்தனர்.
கிருஷ்ணர் தேவகியின் எட்டாவது மகனாகப் பிறந்து கம்சனை வதம் செய்தார் என்பதும், தேவகிக்கு முதலில் பிறந்த ஆறு குழந்தைகள் கம்சனால் கொல்லப்பட்டனர் என்பதும் தெரிந்த கதை. அக்குழந்தைகள் யார் அவர்கள் ஏன் கம்சனால் கொல்லப்பட்டனர் என்பது தெரியாத துணுக்கு.