அன்னை சீதையைக் கடத்திச் சென்ற இராவணன், சீதைக்கு ஒரு வருட கால அவகாசம் கொடுத்தான் என்பதும், தன்னை ஏற்காவிடில் கண்டம் துண்டமாக வெட்டி காலை சிற்றுண்டி தயாரித்து விடுவேன் என்று மிரட்டினான் என்பதும் உலகம் அறிந்த உண்மை. இராவணன் சீதையை பலவந்தமாக அனுபவிக்க எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. இதனால் சில முட்டாள்கள் இராவணனை உத்தமன் என்றுகூட போற்றுகின்றனர். இராவணனுக்கு ஏதோ சாபம் இருந்தது என்பதை சிலர் கேட்டிருக்கலாம். அஃது என்ன சாபம், எவ்வாறு யாரிடமிருந்து வந்தது என்பதே இங்குள்ள தெரியாத துணுக்கு.
கிருஷ்ணரின் பால்ய நண்பர் குசேலர் தனது ஏழ்மையை போக்குவதற்காக, கிருஷ்ணர் துவாரகையிலிருந்தபோது அவரைச் சந்திக்கச் சென்றார் என்பதையும், கிருஷ்ணரைச் சந்தித்த மகிழ்ச்சியில் எதையும் கேட்காமல் திரும்பி வந்தார் என்பதையும், கிருஷ்ணர் அவருக்கு இந்திர லோகத்து செல்வத்தைக் காட்டிலும் அதிக செல்வத்தை வழங்கினார் என்பதையும் பெரும்பாலான மக்கள் அறிவர். குசேலர் எதற்காக வந்தார் என்பதை நன்கு அறிந்திருந்த கிருஷ்ணர் தான் கொடுக்க விரும்பியதை அவர் வந்த சமயத்தில் நேரில் கொடுத்திருக்கலாமே? ஏன் முதுகிற்கு பின்னால் கொடுக்க வேண்டும்?
(1)
மானஸ, தேஹ, கேஹ, ஜோ கிசு மோர
அர்பிலூ துவா பதே, நந்த-கிஷோர!
நந்த கிஷோர! (இளமையுடன் விளங்கும் நந்தரின் மகனே) மனம், உடல், குடும்பம் என என்னவெல்லாம் என்னிடம் உள்ளதோ, அவற்றை உமது பாதங்களில் நான் அர்ப்பணம் செய்கிறேன்.
பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் முக்கிய சீடர்களில் ஒருவராகவும் விருந்தாவனத்தின் ஆறு கோஸ்வாமிகளில் ஒருவராகவும் விளங்குபவர் ரகுநாத தாஸ கோஸ்வாமி அவர்கள். மிகப்பெரிய செல்வந்த குடும்பத்தைச் சார்ந்த அவர், பகவத் பக்தியினால் ஆட்கொள்ளப்பட்டு,...